பக்கம்:பிராயச்சித்தம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 77 "'உங்களை மறக்க முடியுமா? நீங்கள்தானே என் கேலைக் கவனிச்சது?’’ - “Right you are. 2-to-strößla.” தர்மராஜன் உட்காரவில்லை. 'என்னை எதற்குக் கூப்பிட்டிங்க? நான் paroleல் விடுதலையாகவில்லையே! முழு தண்டனையும் அனுபவிச்சாச்சே!' 'Sure, sure யார் இல்வேன்னது? உங்களை அந்த முறையில் நான் கூப்பிடல்லே,’’

  • பின் எந்த முறையில்? போலீஸ்காரனுக்கும் சிrை அடைந்தவனுக்குமிடையே என்னய்யா உறவு கொண் டாடல் வேண்டியிருக்கிறது? இல்லை ஒரு தரம் உள்ளே போய் முறையாக வெளிவந்தாலும் வந்தவனுக்கு இனிமேல் உண்மையான விடுதலை கிடையாது என்கிற கொள்கையில்தானே உங்கள் டிபார்ட்மெண்ட்டே இயங்குகிறது. அதே முறையில்தானே கூப்பிடுகிறீர்கள்?’’

"மிஸ்டர் தர்மராஜன் தயவுசெய்து உட்காருங்கள். உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.' தர்மராஜன் தயக்கத்துடன் அமர்ந்தார். "எனக்கே தெரியல்லே சார் என் வழக்குகளில் தீர்ப் பான பிறகு அவங்களைப்பற்றி நான் இப்படி இருந்த தில்லை. அவர்களைப்பற்றித் திரும்பி நினைக்க எனக்குக் கட்டுப்படியே ஆகாது ஸார்!’ 'நீங்கள் காட்டும் கெளரவம் வேண்டாம், நீங்கள் என்னைக் கூப்பிட்ட காரியத்தைச் சொல்லி என்னைப் போக விடுங்க. அதுவே தயவு.' 'இப்போ நீங்கதான் எனக்குத் தயவு காட்டியிருக்கீங்க. யாரங்கே 333, ரெண்டு காப்பி நல்லதாக் கொண்டுவா!... வந்தியா, ஜல்தி...மிஸ்டர் தர்மராஜன், நான் என் ட்யூட் டியை செஞ்சேன்!”