பக்கம்:பிராயச்சித்தம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 லா. ச. ராமாமிருதம் Patient தானே போட்டுண்டு இருக்கக் கூடாதா? காக்கை ஏற, பனம்பழம் விழன்னு ஆயிருக்கக் கூடாதா. யார் சொன்னத்தையும் கேக்கறதுன்னு Patient சைக்காலஜி ஒண்ணு உண்டு. அந்த டாளியிலிட்டியை அறவே ஒழிக்க முடியாதுன்னு டாக்டரே க்ராஸ்மீவே ஒப்புக்கிட்டாரு. நாய்க்கும் மயக்க மருந்து கொடுத்திருந்ததாலே உங்களுக்கு எதிரா கேஸ் போச்சு. எப்புடியும் ஸேட் கொடுத்திருக்க மாட்டாரு. நாய் உணவில் மயக்க மருந்து; உங்களைத் தவிர வேறு வாய்ப்பு இல்லே. லேட்டுக்கு சமையல்காரர் நீங்கதான். ராவுலேகூட ஸ்ேட்டோடு இருந்திருக்கீங்க. நாய் உணவில் மருத்து சேர்க்க உங்களைத் தவிர வேறு இல்லைன்னு முடிவு எடுக்கும்படி ஆயிடுச்சு. மிஸ்டர் தர்ம ராஜன் இந்தக் கேஸ்லே நீங்க முழுக்க நிரபாரதி இல்லே. ஆனால் எந்த மட்டுக்கும் அபராதின்னு நிச்சயமும் பண்ண முடியல்லே. ' இன்ஸ்பெக்டர் தான் சேய்வது தெரியாமலே சிகரெட்டைப் பற்றவைத்து குப்குப் பலமாக இழுத்து, மார் புள் புகை பரவி சற்று நிறுத்திக்கொண்டு பிறகு வெளியே விட்டார் பெரிய புகை. "சரி. இந்த நகை sateலே காணாமல் போண்தை எடுத்துப்போம். Safe மேலே திருப்பற இடத்துல கைப் பிடியிலே உங்கள் கைரேகையில்லை. சேட்டுனுடைய ரேகையுமில்லே. அதனால நீங்க துடைச்சிருக்கீங்கன்னு முடிவு செய்தால் அதிலும் ஒரு Hitch இருக்குது. ஏன் து:சி தும்பு துடைக்கிற மாதிரி கடைசியா ஆபீஸ் விட்டு மாடி ஏறதுக்கு முன்னால் தானே டஸ்டர் செய்திருக்கக் கூடாது? அது மாதிரியும் உண்டே. "ஆனால் நகை Safe உள்ளே இல்லை. உங்கள் கிட்டக்கவும் இல்லை. உங்களை எங்கள் பார்வையிலிருந்து இந்தப் பக்கம் அந்தப் பக்கம் நாங்க அசையவும் விடல்லே.