பக்கம்:பிராயச்சித்தம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 லா. ச. ராமாமிருதம் துரோகமும் தினசரி வாழ்க்கைப் பதமானங்கள் ஆகி விட்டன. எங்களுக்கு அதனால் மனிதத் தன்மை குறைந்து போயிருக்கலாம். அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? அப்பப்போ நிலைமையை அப்பப்போ உசிதப்படி சமாளிப் பதுதான் வழி. அதில் கொள்கை, லகதியம், நேர்மை இப்படி எல்லாம் எதிர்பார்க்க முடியாது. வாழ்க்கையிலோ நம்பிக்கையில்லை. எது எப்படியானால் என்ன? அமைதி, சந்தோஷம், அன்பு, அடையாளம்கூடக் கண்டுபிடிக்க முடியாதபடி அபூர்வப் பொருள்கள் ஆகிவிட்டன. ஆமாம் ஸார், இப்போ வாழ்க்கையில் குணங்கள் கிடையாது. எல்லாமே பொருள்கள்தான். குணங்கள் கூடப் பொருள்கள்தான். இந்த மூணு வருடங்களில் நான் பாதி ஆண் பிள்ளையாகிவிட்டேன். நீங்கள் எப்படியேனும் என்னை விட்டுக் கழலப் பார்க்கிறீர்கள். அது நியாய மில்லை வார்-’’ புன்னகை புரிந்தார். பெருமூச்செறிந்தார்.