பக்கம்:பிறந்த மண்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 107

பேசியேபொழுதைக் கழிக்கிறோமே மேரி, வர்; இவரையும் கூட்டிக்கொண்டு ப்ோய்த் தேநீர் பருகிவிட்டு வருவோம்" என்றாள் லில்லி.

“புறப்படுங்கள்! எதிர்ப்புறம் அரசாங்கக் கட்டடங் களுக்குப் பக்கத்தில் ஹோட்டல் இருக்கிறது. போய்த் தேநீர் பருகிவிட்டு வருவோம்’-என்று எழுந்து நின்று கொண்டு சிறு குழந்தையைப் போல் அவன் வலக் கையைப் பிடித்து இழுத்தாள் மேரி. .

“மரியாதையாக எழுந்திருக்கிறீர்களா? இல்லா விட்டால் நான் உங்களுட்ைய இன்னொரு கையைப் பிடித்து இழுக்க நேரிடும்"-என்று இடக் கைப்பக்கம் நின்று கொண்டு குறும்புச் சிரிப்புச் சிரித்தாள் லில்லி. சிட்டுக் குருவிகள் போல் அவலக் கவலைகளற்றுத் திரியும் அந்த யுவதிகளின் அன்பிற்கு நடுவே சிக்கிக்கொண்டு மீளமுடி யாமல் திணறினான் அழகியநம்பி.

தேநீரா? இந்த நேரத்தில் எதற்கு? தவிர, அவ்வளவு தூரம் போய்விட்டு மறுபடியும் கடற்கரைக்குத் திரும்பு வதற் தள் இங்கே நன்றாக இருட்டிவிடும். சுகமாகக் காற்று வாங்கிக்கொண்டு இங்கே உட்கார்ந்திருக்கலாமே?’ என்று மறுத்தான் அழகியநம்பி. .

"வரப்போகிறீர்களா? இல்லையா? நாங்கள் கூப்பிடு கிறோம். மறுக்கக்கூடாது'-கோபப்படுவதுபோல் கண் களை உருட்டி விழித்து அவனை ஒரு பார்வை பார்த்தாள் மேரி.

வேண்டாம் மேரி அப்படிப் பார்க்காதே. எனக்குப் பயமாயிருக்கிறது. நான் இதோ வந்துவிடுகிறேன்’ சிரித்துக் கொண்டே எழுந்திருந்தான் அழகியநம்பி. சோமு நின்று கொண்டிருக்கும் இட்த்தைத் தேடிச் சுழன்றது அவன் விழிப் பர்ர்வை. இருபது முப்பது கெஜ துரத்திற்கு அப்பால்'கட லுக்கு மிகவும் பக்கத்தில் தனியாக உட்கார்ந்து முந்திரிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/109&oldid=596822" இலிருந்து மீள்விக்கப்பட்டது