பக்கம்:பிறந்த மண்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 10 . பிறந்த மண்

கார சோமு. "பயப்படாதே! வா டீ குடித்துவிட்டு உடனே வெளியே வந்துவிடலாம்-என்று அவனைக் கூட்டிக்கொண்டு போனான் அழகியநம்பி. தேவையோ தேவையில்லையோ, வில்லியும் மேரியுமாக அந்த ஹோட் டலில் தாங்கள் சந்தித்த தங்களுக்குத் தெரிந்தவர்களுக் கெல்லாம் அழகிய நம்பியை ஆர்வத்தோடு அறிமுகப்படுத்தி வைத்தனர். அதன் பயனாகச் சுமார் பத்துப் பன்னிரண்டு ஆங்கிலப் பெண்களோடும் ஆண்களோடும் கைகுலுக்கி அவனுக்கு அலுத்து விட்டது.

சாதாரணமாக இந்தியர்களோ, தமிழர்களோ அதிகம் பழகாத அந்த ஹோட்டலுக்குள் இரு வெள்ளைக்கார யுவதிகள் இரு தமிழர்களோடு நுழைந்தால் மற்றவர்களுக்கு வியப்பாயிராதா? ஏதோ பொருட்காட்சியிலுள்ள அபூர்வ உருவங்களைப் பார்ப்பது போல் அழகியந்ம்பியையும் சோமு. வையும் பார்த்தனர். படிப்பறிவும் துணிவும் உள்ள அழகிய நம்பி புதிய பார்வையையும் சமாளித்துக் கொண்டான். சோமுதான் ஒன்றும் புரியாமல், ஏனடா இதற்குள் வந்து மாட்டிக் கொண்டோம்? என்று மிரண்டு போய் விழித் தான் .

மேரி இதைப் புரிந்து கொண்டாள். ஹாலில் இருந்த பொது மேஜைக்கு முன்னால் உட்காரப்போன வில்லியைத் தடுத்து, வேண்டாம் அக்கா தனியாக ஒரு குடும்ப அறை . யைப் பார்த்து உட்காரலாம்-என்றாள். "ஃபேமிலி ரும்’ என்று எழுதியிருந்த ஓர் அறைக்குள் போய் எல்லாரும் உட்கார்ந்து கொண்டார்கள்.

சிரிப்பும் பேச்சும் தேநீர் பருகுதலுமாக அரைமணி நேரம் அந்த அறைக்குள் கழிந்தது. மறுபடியும். அவர்கள் ஹோட்டல் வாசலுக்கு வந்தபோது மெல்லிய இருள்திரை உலகத்தின் மேல் விழுந்துமூடத்தொடங்கியிருந்தது. 'திரும் பவும் கடற்கரைக்குப் போய்ச் சிறிது நேரம் பேசிக்கொண் டிருந்துவிட்டுப் போகலாமே!” என்றாள் மேரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/112&oldid=597141" இலிருந்து மீள்விக்கப்பட்டது