உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிறந்த மண்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி !!

யார் இருக்கிறார்கள்? தூரம் தொலைவாயிற்றே என்று தயங்கினால் முடியாது. ஒரு நாலைந்து வருஷம் பல்லைக் கடித்துக்கொண்டு இருந்து விட்டுத் தான் வரவேண்டும்”என்று அவனையும் முந்திக் கொண்டு தன் சம்மதத்தைத் தெரிவித்தாள் அவன் அன்னை. -

அழகியநம்பி பிரமநாயகத்திடம் அவருடன் கொழும் புக்கு வர இணங்கினான். தாம் புறப்படுவதற்கு இன்னும் பதினைந்து இருபது நாட்களுக்கு மேலாகும் என்று கூறிய அவர்,புறப்படுகிற் தேதி, நேரம் முதலியவற்றை விவரமாகச் சொல்லித் தூத்துக்குடிக்கு வந்து தம்மோடு சேர்ந்து கொள்ளுமாறு அவனுக்குக் கூறிவிட்டுப் போயிருந்தார்.

குறிப்பிட்ட தினத்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன் பிருந்தே பிரயாணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கி விட்டான் அழகியநம்பி. அவர்கள் கிராமம் எந்த மலைப்பகுதிகளின் நடுவே இருந்ததோ அங்கே அப்போது மழைப்பருவம்.ஒருவாரத்திற்கு முன்பிடித்த மழைநிற்காமல் பெய்த கோரத்தினால் ஊரே தீவு மாதிரியாகி விட்டது. மொட்டைமாடியில் உட்கார்ந்து கொண்டிருந்த அழகிய நம்பி பெருமூச்சு விட்டான். பிரமநாயகத்துக்குக் கொடுத் திருந்த வாக்கின்படி அன்று காலை 10 மணிக்கு அவன் தூத்துக்குடி துறைமுகத்தில் போய் நின்றிருக்க வேண்டும்

'நினைத்து என்ன பயன்? ஒசால்லியபடி புேரய்க்ரே : முடியவில்லை, அவர் இன்றைக்கே கப்பலேறியிருந்தாலும் ஏறியிருப்பார்-சிந்தன்ையைத் தேக்கிக்கொண்டு ேேழ போவதற்காக அவன். எழுந்திருந்தான். . மாடிக்கு வரும் மரப்படிகளில் யாரோ நடந்து வரும் ஒசை கேட்டது:திரும்பினான்."அண்ணா! அம்மா சாப்பிட்க் கூட்டிக்கொண்டு வரச்சொன்னாள். இட்டிலி ஆற்றிப்பேர்கிற தாம்’-என்று சொல்லிக் கொண்டே அவன் தங்கை வுள்ளி பம்மை வந்து நின்றாள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/13&oldid=596630" இலிருந்து மீள்விக்கப்பட்டது