பக்கம்:பிறந்த மண்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த் தசாரதி - 155

சிறிது தூரம் நடக்கவேண்டும். ஆரவாரமும், வியாபார நெருக்கடியும், மக்கள் கூட்டமும், போக்கு வரவுகளும் மிகுந்த பிரதான வீதி அது. முதல் முதலாக அப்போதுதான் அந்தப் புதிய நகரத்தின் பெரிய வீதியில் தனியாக நடக் கிறான் அவன். பார்வையில் மிரட்சி, கால்களில் விரைவற்ற தடுமாற்றம், நெஞ்சில் குழப்பம்-இந்த நிலையில் கடையை நோக்கி நடந்துகொண்டிருந்தான் அவன். அங்கே-இங்கே சுற்றியலைந்துவிட்டு வீட்டுக்கு அல்லது தங்குமிடத்துக்குப் போகும்போது இருக்கவேண்டிய இயல்பான விரைவு அவனிடம் இல்லை. . .

கடைவாசலில் நுழைந்து பின்கட்டுக்குப் போகும் போது ஏதோ நடைப்பிணம் போவது போலத் தள்ளாடிக், கொண்டே சென்றான் அழகியநம்பி. தான் முன்பு பல நாட்கள் ஒரு ப்யமுமின்றி விளையாடிக் கொண்டிருந்த ஒரு மரத்தடியில், பேய் வாசம் செய்வதாக யாராவது. பெரியவர்கள் கூறக்கேட்டுப் பயமடைந்தபின் மறுமுறை அந்த மரத்தடிக்குச் செல்லும்போது ஒரு சிறுவனின் மனத். திலிருக்கும் பீதியும் மிரட்சியும் அன்றிரவு அந்தப் பெரிய கட்ைக்குள் துழையும்போது அழகிய நம்பிக்கு இருந்தன.

பின் கட்டில் பிர்மநாயகத்தின் பேச்சுக்குரல் கேட்டது. அவன் அதிர்ச்சியடைந்தான். அவனுடைய மனக்குழப்பம் இரண்டு மடங்காயிற்று. தயங்கித் தயங்கி உள்ளே போய்த் தன் அறைக் கதவை ஒசைப்படாது திறந்தான். கண்டிக்குப் போவதாகச் சொன்ன பிரமநாயகம் ஏன் போகவில்லை. என்று வியப்படைந்தான். அவர் சமையலறைக்குள் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் போலிருக்கிறது! சமையலறைக்குள்ளிலிருந்து சோமுவின் குரலும், அவர் குரலும் சேர்ந்து வந்த விதத்திலிருந்து இதை அனுமானித் தான், . .

தன்னை அவர் பார்த்தால்,"எங்கே போனாய்? எதற்குப் போனாய்? யாரைக் கேட்டுக்கொண்டு போனாய்?..." என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/157&oldid=597546" இலிருந்து மீள்விக்கப்பட்டது