பக்கம்:பிறந்த மண்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த் தசாரதி 16%/

மலைத் தொடர்களில் எல்லையின்றிப் பரவிக் கிடக்கும் இயற்கையின் கோலாகலமான வாழ்க்கையைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று நீ எத்தனை முறை கூறியிருக் கிறாய்? அழகியநம்பி! நீ நாற்புறமும் மலைகளால் குழ்ப் பெற்ற ஓர் ஊரில் பிறந்து வளர்ந்தவண்ானாலும் மலை களில் சுற்றிப்பார்க்க வேண்டுமென்ற ஆசை உனக்குக் குறையவில்லை. இதை நினைத்து நான் எத்தனையோ முறை வியப்படைந்திருக்கிறேன்.

- ‘ஆரியங்காவுக் கணவாய், அச்சன்,கோயில்ம6. பச்சை மலை, பாலூற்று-ஒரு நாளைக்கு ஒர் இடமாக இப்படி எத்தனையோ இடங்களைச் ற்றிப்பார்க்கலாம். என்று திட்டம் போட்டிருக்கிறோம். ஆனால், நீ இப்போது இங்கே இல்லை.” - -

-இன்னும் என்னென்னவோ சுற்றி வளைத்து ஒரு ப்ெரிய தொடர் கதையையே கடிதமாக எழுதியிருந்தான் முருகேசன். அதை முழுதும் படித்து முடிக்கவிடாது பூர்ணர்வின் அதிக்ாரக் குரல் கடுமையாக ஒலித்து அவனை அழைத்தது - - -

"இதோ! இந்தக்-கடிதத்தை டைப் செய்யுங்கள்.ஐந்தே நிமிஷங்களில் கடிதம் என் கைக்கு வரவேண்டும்."-தனக்கு வந்த கடிதங்களை மடித்துச் சட்ட்ைப் பைக்குள் வைத்துக் கொண்டு அவள் கொடுத்த .கடிதத்தை டைப் செய்வதற் காக அதை வாங்கிக்கொண்டு டைப்ரைட்டருக்கு முன்னால் பேர்ய் உட்கார்ந்தான் -

அவ்வளவிற்கும் அவள் கொடுத்த அந்தக் கடிதம் கடை வியாபார சம்பந்தமானதோ, ஆபீஸ்தொடர்புடைய அவ சரக் கடிதமோ அல்ல. அவள் தன்னுடைய சிநேகிதிகளில் எவளோ ஒருத்திக்கு எழுதிய கடிதம், இரண்டு பக்கத்துக்கு மேல் வழவழவென்று எழுதியிருந்தாள். அதை டைப் செய்து அவளிடம் கொடுக்கக் கால்மணி நேரம் ஆயிற்று. . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/171&oldid=597580" இலிருந்து மீள்விக்கப்பட்டது