பக்கம்:பிறந்த மண்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 17s

கோபமும் நெஞ்சில் குமுறின. ஆண்பிள்ளையின் தன்மானத் தைச் செயலில் காட்டிவிடத் துடித்தன அவன் கைகள். நேரே பூர்ணாவுக்கு முன்ன்ால் போய் நின்றுகொண்டு.அந்தக் கடிதத்தை அவள் முகத்தில் வீசி எறிந்து, * இது யார் எழு தியது? யாரைவிட்டு எழுதச் சொன்னாய்?சொல்லுகிறாயா? உன் கன்னத்தில் அறையட்டுமா? - என்று கேட்கவேண்டும் போலிருந்தது. நிதானமும், தன்னைப் பற்றிய பயந்த சிந்த னையும் அவனுடைய உண்ர்ச்சித் துடிப்பைச் சிறிது சிறிதாக அடக்கி அமைதியடையச் செய்தன.எல்லாரையும்போல அவ ளும் ஒரு பெண்பிள்ளையாக சாதாரணமான் வெறும் பெண் பிள்ளையாக மட்டும் இருந்துவிட்டால் அழகிய நம்பி தன் கோபத்தை வெளிக்காட்டி உண்மையை அவளிடமிருந்து வரவைத்துவிடலாம். ஆனால் அவள்தான் சாதாரணமான' பெண் இல்லையே!

அழகியநம்பி தன்னை-தன் உணர்ச்சிகளை நித்ான மிழந்துவிடாமல் காப்பாற்றிக் கொண்டுவிட்டான். "சாயங்காலம் சபாரத் தினத்திட்ம் தனியே அந்தக் கடிதத் தைக் காட்டி அவனுடைய ஆலோசனையைக் கேட்டுக் கொண்டு மேலே என்ன செய்யவேண்டுமோ செய்யலாம்:என்று தீர்மானித்துக் கொண்டவனாய்க் கடிதத்தை மடித்து பைக்குள் போட்டான்.

பின்பு, ஒரு மாறுதலுக்கும் ஆளாகாமல் சுபாவமாகத் தன் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினான். வழக்கம் போல் பூர்ணா அவனை ஏவினாள்; அதிகாரம் செய்தாள். அங்கே இங்கே போகச் சொல்லித் துரத்தினாள். பொறுமை யுடனே சிரித்துக்கொண்டே அவற்றைச்செய்தான் அவன்.

வழக்கமாக மூன்று மணிக்கு அலுவலகத்தை விட்டுக் கிளம்பும் பூர்ணா, அன்று இரண்ட்ரை ம்ணிக்கே புறப்பட்டு விட்டாள்.அவள் போவதைப் பார்த்து அவனாகத் தெரிந்து, கொள்வானேயல்லாது, போகும்போது அவனிடம் ஒரு

வார்த்தை சொல்லிக்கொண்டோ, விடை பெற்றோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/173&oldid=597585" இலிருந்து மீள்விக்கப்பட்டது