பக்கம்:பிறந்த மண்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 பிறந்த மண்.

"வேறொரு கடற்கரையா, அது எங்கே இருக்கிறது?"

"மவுண்ட்லெவினியாபீச்-என்று இங்கிருந்து ஏழு மைல் தெற்கே இருக்கிறது. இயற்கையழகு சொட்டும் அற்புத மான கடற்கரை. நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்...' -மேரி வருணிக்கத் தொடங்கிவிட்டாள்.

அழகிய நம்பி யோசித்தான். தயங்கி நின்றான். சபாரத் தினத்தைச் சந்தித்துப் பேசுவதாகச் சொல்லிவிட்டோ:ே இப்போது இவர்களோடு புற்ப்பட்டுப் போய்விட்டால் அந்த மனிதர் அநாகரிகமாக நினைத்துக் கொள்வார். அவரிடம் கலந்து பேசவேண்டிய விஷயமும் முக்கியமானதுதானே? மனக்குழப்பமும், கவலைகளும் நிறைந்த இந்தச் சமயத்தில் எங்காவது வெளியில் போய்ச் சுற்றிவிட்டு வரவேண்டும் போலவுமிருக்கிறது. " . .

'சபாரத்தினத்தையும் உடன் கூட்டிக்கொண்டு போப்

விட்டால் என்ன? போகிற இடத்தில் ஓர் அரைமணி தேர அவ்காசம் வில்லியையும் மேரியையும் விட்டு ஒதுங்கிச் சபா ரத்தினத்தோடு தனியாகப் பேசவேண்டியதைப் பேசிவிட் டால் என்ன?-இந்த யோசனை சரியாகத் தோன்றியது அவன் மனத்திற்கு - -

'காரில் இன்னொருவருக்கும் இடம் இருக்குமோ?"அவன் அவர்களிடம் கேட்டான். .

"ஓ! தாராளமாக...இன்னும் இரண்டு பேருக்குக் கூட இடம் இருக்கும்.” அந்த 'ஒ'-வைச் சொல்லும்போது மேரி யின் கொவ்வைச் செவ்விதழ்கள் குவிந்து விரிந்த அழகு அவன் கண்களுக்கு விருந்தாயிருந்தது. . . . .

“ஒரு நிமிஷம் பொறுங்கள் இதோ வந்துவிடுகிறேன்.”. சபாரத்தினத்தைக் கூப்பிட்டுக்கொண்டு வருவதற்காகக் கடைக்குள் சென்றான் அழகியநம்பி, உள்னே சபாரத்தினம் அப்பொழுதுதான் தன்னுடைய வேலையை முடித்துக் கொண்டு புறப்பட இருந்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/180&oldid=597602" இலிருந்து மீள்விக்கப்பட்டது