பக்கம்:பிறந்த மண்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'தச. பார்த்தசாரதி 191

"இரண்டாயிரம் ரூபாய்க்குச் செக் எழுதி அதை மாற்றிக் கொண்டு வருவதற்காக இந்தப் பியூன் பெயருக்கு "எண்டார்ஸ்’ செய்து வைத்திருந்தேன். அதை எனக்குத் தெரியாமல் நேற்று சாயங்காலமே இவர் எடுத்து இந்தப் பியூனிடம் கொடுத்திருக்கிறார். யாருக்கும் தெரிய வேண் டாம். நீ நாளைக் காலையில் செக்கை மாற்றிக்கொண்டு வா. பணத்தை என்னிட ம் கொடுத்துவிடு, உனக்கு இருநூறு ரூபாய் தருகிறேன்-என்று சோல்லி இவனை ஏமாற்றிப் பணத்தை மாற்றிவர்ச் செய்து ஊருக்குக் கப்பலேறிவிடலா மென்று திட்டம் பேர்ட்டிருக்கிறார், நீங்கள் கூப்பிட்டுக் கொண்டு வந்த இந்த அருமையான மனிதர். நல்லவேளை. “பியூன் இன்று காலையில் என்னிடம் வந்து உண்மையைச் சொல்லிவிட்டான். இல்லாவிட்டால் ப்ணத்தைச் சுருட்டிக் கொண்டு இன்று மாலை கப்பலேறி இருப்பார்.”

பூர்ண்ா மிகத் தெளிவாக-சர்வசாதாரணமாக நடத்த விஷயத்தைச் சொல்லுகிறவளைப் போல அந்த முழுப் பெரும் அபாண்டப் பழிசை அழகிய நம்பியின் தலையில் சுமத்தின்ாள். பொறி கலங்கிப் போகும்படியாக உச்சி மண்டையில் யாரோ ஓங்கி அடித்த மாதிரி இருந்தது அழகியநம்பிக்கு

உங்களுக்கு இவ்வளவு சூழ்ச்சிதான் செய்யத் தெரி யுமா? இதற்கு மேலும் தெரியுமா?’-இரண்டு கைகளையும் சாபம்.கொடுக்கிறவனைப் போல நீட்டிக்கொண்டே கண் களில் நெருப்புப் பொறி பறக்க அவளை நோக்கிக் கூச்சலிட். டான் அவன்.

"சும்மா இரு தம்பி; கத்தாதே."-பிரமநாயகம்.அவ னைக் கையமர்த்தித் தடுத்தார். ". . . . ;

"என்னப்பா, இவர் உன்னிடம் அப்படிச் சொல்விச் செக்கைக் கொடுத்தது வாஸ்தவம்தானா?'- ஆண்மையில் லாத குரலில் அவளுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டே பியூனைக் கேட்டார் அவர் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/193&oldid=597634" இலிருந்து மீள்விக்கப்பட்டது