பக்கம்:பிறந்த மண்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 பிறந்த மண்

- "மெய்தான் முதலாளி. இதோ அந்தச் செக் கூட என்னிடம் இருக்கிற்து'-என்று சட்டைப்பைக்குள் கையை விட்டு எடுத்து அவரிடம் நீட்டினான் பியூன். அவ்ர் அதை வாங்கிப் பார்த்தார்.

"ஏன் அப்பா? உனக்கு நான் என்ன துரோகம் செய்

தேன்! இப்படி முழுப் பொய்யை உண்மை போல் சொல்

கிறாயே!”-என்று அழகிய நம்பி பரிதாபகரமான குரலில் அவனிடம் முறையிடுவது போலக் கேட்டான்.

செய்வதையும் செய்துவிட்டு ஏன் ஐயா நடிக்கிறாய்!” -அந்தப் பியூன் எதிர்த்துக் கேட்டான். அதைக் கேட்டதும் அழகியநம்பிக்கு அடக்கமுடியாத ஆத்திரம் பற்றிக்கொண்டு. வந்தது. "அயோக்கியப் பயலே! யாரைப் பார்த்தடா இந்தக் கேள்வியைக் கேட்கிறாய்?நடிப்ப்து நீயா? நானா?-- என்று இரைந்து கூப்பாடு போட்டுக்கோண்டே கீழே கிடந்த நாற்காலியை இரண்டு கைகளாலும் தூக்கித் தலைக்கு மேல் சுழற்றி ஓங்கி அவனை அடிக்கப் போனான் அழகியநம்பி, ஒருகணம் பசி கொண்ட புலியாக சினம்மிக்க புலிய க மாறி விட்டான் அவன். பிரமநாயகம் மட்டும் குறுக்கே பாய்ந்து தடுத்திருக்கவில்லையானால் அந்தப் பியூனுக்குக் கையாவது, காலாவது முறிந்து போயிருக்கும்

"சீ சீ இதென்ன கோபம் தம்பி, உனக்கு? தான்.தான் நிதானமாக விசய் ரித்துக் கொண்டிருக்கிறேனே, அதற்குள் ஏன் இப்படி முரட்டுத்தனமாக நட ந்து கொள்கிறாய்! கைப் புண்ணுக்கு கண்ண்ாடி வேறா வேண்டும்?இதோ செக்கை' எடுத்துக் காண்பித்துவிட்டானே அவன்? நீ என்ன சொல்ல இருக்கிறது இனிமேல்?”

திடிரென்று அவன் எதிர்பார்ச்த்தத்கு முற்றிலும் மாறாகப் பிரமநாயகன்ே அவனை மடக்கிக் கொண்டு இரையத் தொடங்கினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/194&oldid=597637" இலிருந்து மீள்விக்கப்பட்டது