நா. பார்த்தசாரதி 229
"ஏன் சிரிக்கிறீர்கள்?"
'ஒன்றுமில்லை! உங்களுடைய கள்ளமில்லா மனங்களை நினைத்துக் கொண்டேன். சிரிப்பு வந்தது. எங்கோ தற்செய லாகச் சந்தித்துப் பழகிய ஒரு தமிழ்நாட்டு இணைளு னுக்கு உங்களிடமிருந்து இவ்வளவு அனுதாபம் கிடைப்பதை எண்ணும்போது உண்மையாக எனக்குப் பெருமிதம் உண் டாகிறது."-அவன் கூறியதைக் கேட்டதும் அந்தப் பெண்கள் தலையைக் குனிந்து கொண்டனர்
பிரயாணம் தொடங்கிய எட்டாவது நாள் மாலை இருட்டுகிற சமயத்துக்கு அவர்கள் கொழும்பை அடைந் தனர். பிரமநாயகத்தின் கடையிருந்த தெருவழியேதான் டிரைவர் காரை விட்டுக்கொண்டு போனான். கடையிருக்கு மிடத்தை கார் நெருங்கும்போது அவன் இதயம் படபட" வென்று வேகமாக அடித்துக் கொண்டது.
ஒரு விநாடி காரை அந்த இடத்தில் வேகத்தைக் குறைத்து நிறுத்துமாறு டிரைவரிடம் கூறினான் அவன். கார் நின்றது. வெட்கத்தோடும், யத்தோடும் தலையை வெளியே நீட்டி எட்டிப் பார்த்தான். அந்தத் தெருவில் அப்போது நின்றுகொண்டிருந்த அத்தனை பேரும் தன் னையே பார்ப்பதுபோல் அவன் மனத்தில் ருை பிரமை உண்டாயிற்று.
சாதாரணமாக அந்த மாலை நேரத்திற்கு அந்தக் கடை வாசலில் திருவிழாக் கூட்டம் தென்படும். அன்று மயான பூமி போலக் கலகலப்பிழந்து இருண்டு காணப்பட்டது. கடை பூட்டியிருந்தது. கொலை நடந்த இடம் என்பதற் காகக் காவல் வைக்கப்பட்டிருந்த போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தனர். தெருவில் நடந்து போய்க்கொண்டிருந் தவர்கள் அந்தக் கடைவாசல் வந்தவுடன் ஏதோ விந்தைப் பொருளைப் பார்ப்பதுபோல் ஓரிரு விநாடிகள் நின்று பார்த்துவிட்டுப் போனார்கள். சிலர் இரகசியமாக ஏதோ பேசிக்கொண்டு செல்வதையும் அழகியநம்பி கண்டான்.
- பி-15