பக்கம்:பிறந்த மண்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 - பிறந்த மண்

முதன் முதலாகக் கப்பலில் வந்து இறங்கிப் பிரமநாய கத்தோடு அவரைப் பின்பற்றி அந்தக் கடைக்குள் காலடி வைத்தபோது எவ்வளவு நம்பிக்கைகளைத் தன் மனத்தில் உண்டாக்கிக் கொண்டான் அவன்? தன்னையும், தன் குடும் பத்தின் கடல் கடந்த ஏழைமையையும், அக் கடை போக்கி விடப் போகிறதென்று எவ்வளவு பெருமையாக நினைத் தான் அவன்! நான்கைந்து ஆண்டுகள் ஊரை மறந்து, பிறந்த மண்ணை மறந்து, பெற்றவள், உடன் பிறந்தவள், உற்றார், உறவினரை மறந்து ஊழியம் செய்தால் சில ஆயிரம் ரூபாய்களைத் திரட்டிக்கொண்டு தாயகம் திரும்ப லாம் என்று கனவு கண்டானே அவன்?

ஆனால், இப்போது காரிலிருந்து தலையை வெளியே நீட்டி அந்தக் கடையின் இருண்ட முகப்பைப் பார்க்கும் போது அவன் உள்ளத்தில் என்ன உணர்ச்சி உண்டாயிற்று தெரியுமா? உலகத்திலேயே மிக மட்டமான அருவருக்கத் தக்க ஒரு பொருளை, யாரோ தன்னைத் தன் கண்களினால் வற்புறுத்திப் பார்க்கச் செய்துவிட்டாற்போன்ற உணர்ச்சி தான் உண்டாயிற்று.தலையை உள்ளே இழுத்துக்கொண்டு டிரை வரிடம் காரைச் செலுத்துமாறு சொன்னான். கார் புறப்பட்டது. به.

'கடைக்குள் உங்கள் பெட்டி படுக்கை, வேறு பொருள்கள் எவையேனும் அகப்பட்டுக்கொண்டு விட்ட னவோ?’-என்று மேரி அவனைக் கேட்டாள்

'இல்லை! அப்படி ஒன்றும் அதிகமான பொருள்களை இந்த நாட்டிற்கு வரும்போது நான் கொண்டுவரவில்லை”. என்று சுருக்கமாக அவளுக்குப் பதில் சொன்னான் அவன்.

கார் வெள்ளவெத்தையில் உள்ள அவர்கள் பங்க ளாவை நோக்கிச் சென்றது.

"எனக்கு இப்போது உடனே சபாரத்தினத்தைக் காண வேண்டும். என்னைப் பம்பலப்பிட்டியாவில் உள்ள சபா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/232&oldid=597728" இலிருந்து மீள்விக்கப்பட்டது