பக்கம்:பிறந்த மண்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர். பார்த்தசாரதி 247

அசைத்தான் அழகியநம்பி. மனம் திறந்து உணர்ச்சியை வார்த்தைகளில் கொட்டிப் பேசமுடியாமல் தொண்டையில் ஏதோ கெட்டியாக வந்து அடைத்துக் கொள்வதுபோல் இருந்தது அவனுக்கு. சபாரத்தினம் அன்பு ததும்ப அவனை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே, “எங்கே? உங்களுடைய இடக்கை மணிக்கட்டை இப்படிக் கொஞ்சம் நீட்டுங்கள், பார்க்கலாம்....' என்றார். அவன் கையை நீட்டினான். அழ 'கான புதிய கைக்கடிகாரம் ஒன்றை எடுத்து அவன் கையில்

கட்டினார் அவர் ,

"நேரத்தைப் பார்க்கும்போதெல்லாம் என் நினைவு வரவேண்டும்’-சொல்லிவிட்டுச் சிரித்தார். அவர்களுன்டய அன்பளிப்புகளை வேண்டாமென்று மறுக்கவும் துணி வில்லை.ஏற்றுக்கொண்டு எப்படித் தன் நன்றியைச் சொல்வ தென்றும் தெரியவில்லை. அழகிய நம்பி திகைத்தான். பல வகைப் பழங்கள் அடங்கிய இரண்டு மூன்று பழக்கூடை களையும், இலங்கையில் மட்டுமே கிடைக்கும் நல்ல பட்டு, ஜப்பான் துணிகள் அடங்கிய அட்டைப் பெட்டிகளையும் அவனுக்கு வோட்ஹவுஸும் திருமதி வோட்ஹவு-ம் அன்பளிப்பாக அளித்தனர்.

சுங்கப் பரிசோதனை முடிந்து துறைமுகத்தின் உம் புறத்தை அடைந்தனர்- - -

"நீங்கள் எல்லாருமாகச் சேர்ந்து என் சுமைய்ை அதிக மாக்கிவிட்டீர்கள்.” இந்தச் சொற்களைக் கூறும்போது அழகியநம்பிக்கு நாத் கழுதழுத்தது, கண்கள் கலங்கி ஒரங் களில் ஈரம் கசிந்தது, - -

“கைச்சுமையை மட்டும்ா? இதயச் சுமையையும் அதிக மாக்கி அனுப்புகிறோம்’-சொல்லிவிட்டுப் புன்னகை செய் தார் சபாரத்தினம், வேர்ட்ஹவுஸ், கப்பலில் அவன் வசதி யாகப் பிரயாணம் செய்வதற்காக முதல் வகுப்பு டிக்கட் வாங்கிக் கொண்டுவந்து கொடுத்தார். லில்லியும் மேரியும் பறிகொடுக்கமுடியாத, இழக்கக்கூடாத ஒரு பொருளைச் சிறிது சிறிதாகப் பறிகொடுத்து இழந்துகொண்டிருப்பவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/249&oldid=597769" இலிருந்து மீள்விக்கப்பட்டது