பக்கம்:பிறந்த மண்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களே!-என்று முருகேசன் அழகியநம்பியிடம் கேட்டான. "ஓ! மலையில் நெருப்பு எரிவதைக் கேட்கிறாயா? இந்த ஊரில் ஒரு பெரிய மனிதர் இருக்கிறார். பன்னீர்ச்செல்வம் என்று பெயர். சர்க்காருக்குப் பணம் கட்டி லைசென்ஸ் வாங்கி மரங்களை எரித்துக் கரி முட்டை வியாபாரம் செய் கிறார். பட்ட மரங்களை மட்டும் எரித்துக்கொள்ளலாம். என்றுதான் அவருக்கு லைசென்ஸ். மனிதர், பட்டவை, பசுமையானவை, என்ற வேறுபாடு இல்லாமல் எல்லாவற் றையும் கரியாக்கிக் கரியைக் காசாக்கிக் குவித்துக் கொண்டி ருக்கிறார். இது போதாததற்கு வட்டிக்கடை, லேவாதேவித் தொழில் வேறு.” -

"அவர் பிழைக்கத் தெரிந்தவர்! விவரந்தெரிந்து வகை யாகப் பிழைக்கிறார். இல்லையானால் உன்னைப்போலவா 'நிலத்தைக் குத்தகைக்குப் பிடித்து உழப் போகிறேன்என்று பைத்தியக்காரத்தனமாகத் திட்டம் போட்டுக் கொண்டு திரிவார்கள்?’-என்று அவன் கூறியதை வைத்துக் கொண்டு அவனையே மடக்கிக் கேலி செய்தான் முருகேசன்.

இப்போது இப்படித் தான் சொல்லுவாய்! போகப் போகத் தெரியும் என் திட்டங்களின் வெற்றி. நான் என்னு டைய இலட்சியத்தில் சித்தியடைந்து நிற்கிறதை நீயும் ஒரு நாள் பார்க்கத்தான் போகிறாய்!”

"அழகியநம்பி! நீ சரத்சந்திரரின் கிராம சமாஜம்என்ற நாவல் படித்திருக்கிறாய் அல்லவா?” -

"ஏன்? எப்போதோ கல்லூரி நூல் நிலையத்தில் எடுத்துப் படித்திருப்பதாக நினைவிருக்கிறது. அதற்கும் நாம் இப்போது பேசிக் கொண்டிருக்கிற விஷயத்திற்கும் என்ன சம்பந்தம்' .

"சம்பந்தம் இருக்கிறது! இல்லாவிட்டால் வேலையற்றுப்

போய்க் கூறுவேனா?, படித்துப் பட்டம் பெற்ற ஒருவன் கிராமத்தில் வாழ்ந்து பரந்த நோக்கங்களையும், உண்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/264&oldid=597805" இலிருந்து மீள்விக்கப்பட்டது