பக்கம்:பிறந்த மண்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 - பிறந்த மண்

'பதறாதே அம்மா! நான் சொல்கிற திட்டத்தைக் கேட்டுவிட்டு அப்புறம் சொல்'-என்று தொடங்கி முருகேச னும் தானும் தீர்மானித்திருப்பதையெல்லாம் தன் தாய்க்கு விவரித்துச் சொன்னான் அழகியநம்பி.

'உனக்குப் பைத்தியம் தான் பிடித்திருக்கிறது. இதெல் லாம் நடக்கிற காரியமா என்ன? பேசாம்ல் நாலு இடத் திற்கு எழுதிப்போட்டு நல்ல உத்தியோகமாகத் தேடிக் கொண்டு போய்ச் சேர்” என்றாள் அவன் தாய்

'நீ என்ன வேண்டுமானாலும் சொல் அம்மா இத்தனை நாளாக இல்லாமல் உன் வார்த்தையைத் தட்டிப் பேசுவ தற்கு என்னை மன்னித்துவிடு. நான் என் உழைப்பை இந்த மண்ணில் பயன்படுத்துவதற்கு உறுதி செய்துவிட்டேன். ஆரம்பத்தில் கஷ்ட நஷ்டங்கள் வரும்; அவற்றை நான் பொருட்படுத்தப் போவதில்லை.”

அதுநாள்வரை எதிர்த்துப் பேசாதவன் எதிர்த்துப் பேசியதைக் கண்டதும் அவள் திகைத்துப்போனாள்.

“என்னவோ? நீ தலையெடுத்தாவது இந்தக் குடும்பம். விடியும் என்றிருந்தேன். நீயும் இப்படிக் கிளம்பிவிட்டாய். ன்க்கேடு கெட்டாவது போ" என்று கோபத்துடன் இரைந் தாள் அந்த அம்மாள் -

அதற்குமேல் அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்க விரும்ப் வில்ல்ை அவன். நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் கொடுப்பதற்காகப் பழக் கூடைகளைப் பிரித்துப் பழங்களை எடுத்துக் கொண்டான் துணிப்பெட்டியைத் திறந்து காந்தி 'மதி ஆச்சியின் பெண்களுக்குக் கொடுப்பதற்காக நல்ல துணி கனாகக் கொஞ்சம் எடுத்துக்கொண்டு வள்ளியம்மையைக் அப்பிட்டு எஞ்சியவற்றை அவளிடம் ஒப்படைத்தான், •

"இந்த்ாருங்கள் அண்ணா"- என்று கடிகாரத்தையும் மோதிரங்களையும் கொண்டுவந்து கொடுத்தாள் அவள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/272&oldid=597825" இலிருந்து மீள்விக்கப்பட்டது