பக்கம்:பிறந்த மண்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந்ள். பார்த்தசாரதி 293

னையோ பெரிய இடங்களிலிருந்து உங்களுக்குப் பெண் கொடுக்கத் தயாராயிருப்பார்கள்.” - •

ஆச்சியின், சொற்கள் பொதுவாகக் கூறப்பட்டவை. போலிருந்தாலும் அவனைக் குத்திக் காட்டுவதாகத் தோன்றின. அவனுக்கு .

மேலும், சிறிது நேரம் யோசித்துக்கொண்டே பதில் சொல்லாமல் உட்கார்ந்திருந்தான் அவன்.

"என்ன தம்பி யோசனை? மனத்தில் படுவதைச் சொல் லுங்கள். தயங்க வேண்டாம்’-என்று துரிதப்படுத்தினார் நாராயண பிள்ளை, - -

தனக்குள் ஏதோ ஒரு தீர்மானத்திற்கு வந்தவனைப் போல் தலைநிமிர்ந்தான் அழகியநம்பி. அப்போது உட் புறத்தில் கதவோரமாக அந்த இரண்டு கண்கள் ஏக்கத் தோடு தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை அவன் கண் டான். பதினேழு மாதங்களாக அவனைக் காணாமல் ஏமாந்து ஏங்கிய சண்கள் அவை. இனியும் என்னால் பொறுக்க முடியாது, என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்!"என்று அவனைக் கெஞ்சியது அந்தப் பார்வை. ‘மணியக்காரரோ இந்த மாத முடிவிற்குள் ஏதாவது நல்ல முகூர்த்தம் இருக் கிறதா? பார்த்து ஏற்பாடு செய்து விடுங்கள். எனக்குப் பூரணமான் சம்மதம்தான். நான் தயார்' என்று கதவுப் பக்கம் சென்ற தன் பார்வையைத் திருப்பி அவரை நோக்கிக் கூறிவிட்டு எழுந்திருந்தான் அவன்

சம்மதிக்கமாட்டான்-என்று நினைத்துக் கொண் டிருந்த அவர்களுக்கு அவன் சம்மதம் ஆச்சரியத்தை அளித்தது -

"உட்காருங்கள் தம்பி! கொஞ்சம் பொறுத்திருந்து போகலாம். கோமுவை அனுப்பி உங்கள் அம்மாவைக் கூப்

- او از سس گ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/295&oldid=597883" இலிருந்து மீள்விக்கப்பட்டது