பக்கம்:பிறந்த மண்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 - பிறந்த மண்

'இதே தடா சனியன்! சீக்கிரம் போய்த் தொலையமாட் டார் போலிருக்கிறதே? இந்த மனிதர் இவற்றை எல்லாம் விசாரிக்கவில்லையென்று யார் குறைபட்டுக் கொண்டிருக்கி றார்கள்? கடன் பணத்தைக் கேட்கவந்தவர் கேட்டுவிட்டுப் போகவேண்டியது தானே?--அவளுக்கு எரிச்சலாக வந்தது. அந்த மனிதர் அங்கிருந்து எப்போது எழுந்து செல்வார் என்று சலிப்பு ஏற்பட்டது.

'கலியாணத்துக்கு என்ன அவசரம்? கடன் உடன்க ைள அடைத்துவிட்டு நிதானமாகப் பார்த்துச் செய்யவேண்டும்” என்று சுவாரஸ்யமில்லாத குர்லில் எங்கோ பார்த்துக் கொண்டு பதில் சொன்னாள்.

“பெண்ணுக்கு ஆவதற்கு முன்னால் உங்கள் பையன் அழகியநம்பிக்கு ஆக வேண்டாமா? -

'உ.ம்....எல்லாம் நடக்க நடக்கப் பார்க்கலாம். நான் உள்ளே போகிறேன். எனக்குச் சமையல் வேலை பாக்கி இருக்கிறது."-அதற்கு மேலும் பன்னீர்ச்செல்வத்தின் தொணதொணப்புக்கு ஆளாக விரும்பாமல் உட்புறம் நகர்ந் தாள் அந்த அம்மாள். - -

'சரி நானும் இப்படிப் போய்விட்டு வருகிறேன். நினைவு வைத்துக் கொள்ளுங்கள். நான் சொன்னால் சொன்னது தான். பதினைந்து நாளில் வட்டிப்பணம் கைக்கு வந்து சேரவேண்டும். உங்கள் பிள்ளைக்கும் எழுதிவிடுங்கள். சொன்ன தேதியில் பணம் கைக்கு வரவில்லையானால் நான் மிகவும் கெட்டவனாயிருப்பேன்."- பன்னீர்ச்செல்வமும் கிளம்பிவிட்டார். அத்தனை குழைந்து, இரக்கம் காட்டு பவர்போல் வம்புப் பேச்செல்லாம் பேசி முடிந்த பின்பும் தொழில் முறைக்குச் செய்யவேண்டிய எச்சரிக்கையைக் கொடுமையாகச் செய்துவிட்டுத்தான் போனார்.

திண்ணையிலிருந்து செம்பையும் டம்ளரையும் எடுத்துச் செல்வதற்காகற் திரும்பிவந்த அந்த அம்மாள் தபால்காரன் வருவதைக் கண்டு தயங்கி நின்றாள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/94&oldid=596792" இலிருந்து மீள்விக்கப்பட்டது