பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்தாம் அதிகாரம் முதல் இராசராசசோழன் கி. பி. 985-1014 சோழ இராச்சியத்தின் வளர்ச்சிக்கு முதற்காரண மாக இருந்தது சோழர் குடியில் தோன்றிய அரசர்களின் ஆற்றலேயாம். அத்தகைய ஆற்றலமைந்த சோழ மன்னர் களுள் முதல் இராசராசசோழன் தலைமை வாய்ந்தவன் என்று கூறலாம். இவ்வேந்தன் இரண்டாம் பராந்தக சோழனுக்கு அவன் பட்டத்தரசியாகிய வானவன் மாதேவி பாற் பிறந்த அரும்பெறற் புதல்வன் ஆவன் 1. இவன் எடுப்பித்த தஞ்சை இராசராசேச்சுரத்திலும், இவன் பட் டத்தரசி திருவையாற்றில் கட்டுவித்த உலோக மாதேவீச் சுரத்திலும் திங்கள் தோறும் சதய நாளில் சிறப்பாக விழா நடைபெறுவதற்கு நிவந்தங்கள் விடப்பட்டிருத்த லால் இவன் சதய நன்னாளில் பிறந்தவன் என்பது நன் கறியக்கிடக்கின்றது.. இவனைச் ' சதய நாள்விழா உதி யர் மண்டலந்தன்னில் வைத்தவன்' என்று கலிங்கத் துப்பரணி3 புகழ்ந்து கூறுவதாலும் இச்செய்தி வலியுறு கின்றது. 1. ' செந்திரு மடந்தைமன் சீராஜ ராஜன் இந்திர சமானன் இராஜசர் வஞ்ஞனெனும் புலியைப் பயந்த பொன்மான் ' ...................... ' மாதவித் தொங்கல் மணிமுடி வளவன் சுந்தர சோழன் மந்தர தாரன் திருப்புய முயங்குந் தேவி” S. I. I., Vol. VII, No. 863. Ibid, Vol. III, No. 205. 2. Ibid, Vol. II, No. 26. 3. க. பரணி-8, தா. 24.