பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 பிற்காலச் சோழர் சரித்திரம் பிறகு, இராசராச சோழனது படை குடமலை நாட்டைத் தாக்கிற்று. அந்நாடு இக்காலத்தில் குடகு என்று வழங்கும் நாடேயாம்.1 கொங்காள்வார் மரபில் வந்த ஒருவன் அப் போது அதனை அரசாண்டு கொண்டிருந்தான். பணசோகே என்ற இடத்தில் ஒரு பெரும் போர் நடைபெற்றது. அதில் அவன் தோல்வியுற்று ஓடிப்போனான். அப்போரில் வீரங் காட்டிப் போர்புரிந்த மனிஜா என்பவன் செய்கையைப் பாராட்டி, இராசராச சோழன் ஆணையின்படி அவனுக்கு க்ஷத்திரிய சிகாமணி கொங்காள்வான் என்ற பட்டம் வழங்கப் பெற்றதோடு மாளவ்வி என்னும் ஊரும் அளிக்கப்பட்டது. மனிஜாவின் மரபினர் சுமார் நூறாண்டுகள் வரையில் சோழர் கட்கு அடங்கிய குறு நில மன்னராய்க் கொங்காள்வார் என்னும் பட்டத்துடன் குடகு நாட்டில் அரசாண்டு வந்தனர். எனவே, அப்போர் நிகழ்ச்சிக்குப் பிறகு குடமலை நாடு அம் மனிஜா என்பவனுக்கே அளிக்கப்பட்டது போலும். அதன் பின்னர், குடகு நாட்டிற்குப் பக்கத்திலுள்ள கங்கபாடியும் நுளம்பபாடியும் இராசராசன் படைகளால் தாக்கப்பெற்றன. கங்கபாடி என்பது மைசூர் இராச்சியத் தின் தென் பகுதியும் சேலம் ஜில்லாவின் வடபகுதியும் தன்னகத்துக் கொண்ட கங்க நாடாகும். அதன் தலை நகர் தழைக்காடு என்பது. அந்நாட்டைக் குவளாலபுர பரமேசுவரர் களான மேலைக்கங்கர்கள் ஆண்டு வந்தனர். நுளம்பபாடி என்பது மைசூர் இராச்சியத்தின் கீழ்ப் பகுதியையும் பல்லாரி ஜில்லாவையும் தன்பாற் கொண்ட நாடாகும்.2 பல்லவருள் ஒரு கிளையினரான நுளம்பர்கள் அதனை ஆண்டு வந்தனர். இராசராச சோழனது படையெழுச்சியில் கங்கபாடியும் நுளம்பபாடியும் கைப்பற்றப்பட்டன. அப் படையெடுப்பின் இறுதியில், மைசூர் ஜில்லாவைத் தன்னகத்துக் கொண்ட 1. சிலப்பதிகாரம், காதை XI, வரி 53. 2. Ep. Ind., Vol. X, Page 57.