பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசேந்திர சோழன் 151 லுள்ள கலியாணபுரத்தைத் தக்க அரணுடைய நகரமாகக் கருதித் தம் தலை நகரை அங்கு மாற்றிக்கொண்டனர். மேலைச் சளுக்கியரது ஆட்சிக்குட்பட்ட இடைதுறை நாடு, வனவாசி, கொள்ளிப்பாக்கை, மண்ணைக்கடக்கம் என்பவற்றின்மீது இராசேந்திரன் படையெடுத்துச் சென்று வெற்றி யெய்திய செய்திகள் இவனது ஆட்சியின் தொடக்கத்தில் வரையப்பெற்ற கல்வெட்டுக்களிலேயே காணப்படுவதால் அந்நிகழ்ச்சிகள் இவன் பட்டம் பெறு வதற்கு முன்னர் நடைபெற்றிருத்தல் வேண்டும் என் பது ஒருதலை. மேலைச்சளுக்கிய - மன்னனாகிய சத்தி யாசிரயன் கி. பி. 1008-ஆம் ஆண்டில் இறந்துவிட்டபடி யால் அவனோடு நிகழ்த்தப்பெற்றனவாக அறியப்படும் அப்போர்கள் எல்லாம் அவ்வாண்டிற்கு முன் நடைபெற் றவை என்று ஐயமின்றிக் கூறலாம். எனவே, அவை இராசராசசோழன் ஆட்சிக்காலத்தில் அவன் புதல்வ னாகிய நம் இராசேந்திரன் வடபுலத்தில் பெற்ற வெற்றி களேயாதல் வேண்டும். கி. பி. 1007-ல் நிகழ்ந்த தாக ஹொட்டூர்க் கல்வெட்டு! உணர்த்தும் இவனது வடநாட்டுப் படையெழுச்சியும் ஒருகால் அவற்றையே குறிப்பினும் குறிக்கலாம். இனி இராசேந்திரன் மெய்க்கீர்த்தியில் அடுத்துக் கூறப்படுவது இவன் ஈழநாட்டை வென்ற செய்தியே யாம். அப்போர் நிகழ்ச்சி இவனது ஆட்சியின் ஐந்தாம் ஆண்டுக் கல்வெட்டுக்களில்தான் முதலில் காணப்படு கிறது. அந்நிகழ்ச்சி, அவ்வாண்டுக் கல்வெட்டுக்களுள் 1. Ep. Ind., Vol. XVI, p. 74. 2. ' பொருகட லீழத் தரசர்தம் முடியும் ஆங்கவர் தேவியர் ஓங்கெழில் முடியும் முன்னவர் பக்கல் தென்னவர் வைத்த சுந்தர முடியும் இந்திரன் ஆரமும் தெண்டிரை ஈழ மண்டலம் முழுவதும்' (S. I. 1., Vol. IV, No. 327; ibid, Vol. VII, No. 860 ; Ibid, Vol. VIII, No. 583.)