பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 பிற்காலச் சோழர் சரித்திரம் சிலவற்றில் குறிக்கப்படாமலிருத்தலை நோக்குமிடத்து, இவ்வேந்தன் ஈழ நாட்டில் நிகழ்த்திய போர் இவனது ஆட் சியின் ஐந்தாம் ஆண்டின் நடுவில் நடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது நன்கு புலனாகின்றது. இலங்கை வரலாறு கூறும் மகாவம்சமும் அப்போர் கி. பி. 1017-ல் நிகழ்ந்தது என்று கூறி அச்செய்தியை வலியுறுத்துகின் றது. இராசராசசோழன் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஈழநாட்டுப் போரில் தோல்வியுற்று ஓடியொளிந்த ஐந் தாம் மகிந்தன் என்னும் சிங்கள வேந்தன், சில ஆண்டுகட் குப் பிறகு சோழர் ஆட்சிக்குட்படாமல் அத்தீவின் தென் கிழக்கில் சேய்மையிலிருந்த ரோகண நாட்டிலிருந்து பெரும்படை யொன்றைத் திரட்டிக்கொண்டு சோழர்கள் மீது போர் தொடுத்துத் தான் இழந்த நாட்டைக் கைப் பற்ற முயன்றனன். அதுபற்றியே இராசேந்திர சோழன் கி. பி. 1017-ல் ஈழ நாட்டின் மேல் மீண்டும் படையெடுத் துச்செல்வது இன்றியமையாததாயிற்று. அப்படை யெழுச்சி யில் ஈழத்தில் நிகழ்ந்த போரில் இவன் வெற்றி பெற்றமையோடு சிங்கள மன்னர்கட்கு வழிவழியுரிமை யுடையதாயிருந்த சிறந்த முடியினையும் அன்னோர் தேவி யரது அழகிய முடியினையும் கைப்பற்றிக்கொண்டு சோழ நாட்டிற்குத் திரும்பினான். அன்றியும், மூன்றாம் இராச சிம்ம பாண்டியன் ஒரு நூற்றாண்டிற்கு முன்னர், இலங்கை வேந்தனிடத்து அடைக்கலமாக வைத்துச் சென்ற பாண்டியர் முடியையும் அன்னோர்க்குரிய இந் திரன் ஆரத்தையும் 2 இவன் கைப்பற்றிக்கொண்டமை 1. S. I. I., Vol, V, No. 1413; Ibid, Vol. VII, No. 814' Ins. 140 of 1919; Ins 235 of 1926. ' தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் மார்பினவே' என வரும் சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவைப் பாடற் பகுதியாலும், இந்திரன் முனிந்து இட்டபூணாகிய ஆரமும்........... ............. தென்னர்கோன் மார்பிடத்தன என்னும் அடி யார்க்கு நல்லாருரையரலும் பாண்டியர்கள் வழிவழி யணிந்து வந்த இந்திரன் ஆரத்தின் வரலாறு குறிக்கப்படுதல் காண்க, இவ்வரலாற்றின் விரிவைத் திருவிளையாடற் புராணத் தாலுணரலாம்.