பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

207 முதல் இராசாதிராச சோழன் கல்யாணபுரத்தில் போர்புரிந்து வெற்றி பெற்றிருத்தல் வேண்டும் என்பது நன்கு வலியுறுதல் காண்க. இராசாதிராசன் குந்தள நாட்டின்மேல் மும்முறை படை யெடுத்துச்சென்று நிகழ்த்திய வீரச்செயல்கள் எல்லாம், ' கம்பிலிச்சயத் தம்ப நட்டதும் கடியரண்கொள் கல்யாணர் கட்டறக் கிம்புரிப்பணைக் கிரியுகைத்தவன் கிரிகளெட்டினும் புலி பொறித்ததும் 1' என்று கலிங்கத்துப்பரணியிலும் '...................மும்மடி போய்க் கல்யாணி செற்ற தனியாண்மைச் சேவகனும் 2' என்று விக்கிரமசோழன் உலாவிலும் முறையே சயங் கொண்டார் ஒட்டக்கூத்தர் ஆகிய இரு கவிஞர் பெருமான் களாலும் பாராட்டப்பெற்றிருத்தல் அறியற்பாலது. சோழர்க்கும் மேலைச்சளுக்கியர்க்கும் நிகழ்ந்த போர்கள் எல்லாம் அடிக்கடி குந்தள இராச்சியத்திலேயே நடை பெற்றமையின் அந்நாட்டு மக்கள் எல்லோரும் அமைதியான வாழ்க்கையின்றி அல்லலுறுவாராயினர். அன்றியும், அவ் விராச்சியத்தில் பல நகரங்கள் சோழரது படையெடுப்பினால் தம் செல்வமும் சீரும் இழந்து அழியும் நிலையை எய்தின. தம் குடிகளுக்கும் நகரங்களுக்கும் ஏற்பட்ட இன்னல்களைக் குந்தள நாட்டு வேந்தரும் குறு நில மன்னருங் கண்டு, பெருங் கவலைகொண்டு, மன முடைந்தனரெனினும், அன்னோர் தம் இராச்சியத்தில் பெரும்பகுதியை இழந்து விடாமல் தம் ஆட்சிக்குள் வைத்துக்கொண்டிருந்தன ரென்பது அந்நாட்டில் காணப்படும் பல கல்வெட்டுக் களால் புலப்படுகின்றது. 1. க. பரணி, VIII. பா 26. 2. வி. உலா , வரிகள். 37-38.