பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 பிற்காலச் சோழர் சரித்திரம் கி. பி. 1054-ஆம் ஆண்டில் இராசாதிராசன் தன் தம்பி இரண்டாம் இராசேந்திரனோடு மறுபடியும் மேலைச்சளுக் கிய நாட்டின் மேல் படையெடுத்துச் சென்றான். கிருஷ்ணை யாற்றங்கரையிலுள்ள கொப்பத்தில் இரு படைகளும் கைகலந்து கடும்போர் புரிந்தன. சளுக்கியர் பக்கத்தில் ஆகவமல்லனும் சோழர் பக்கத்தில் இராசாதிராசனும் படைத்தலைமை வகித்துப் போரை நடத்தினர். இராசாதி ராசன் தம்பியாகிய இரண்டாம் இராசேந்திரன் போர்க் களத்திற்கு வராமல் பெரும்படையுடன் பாடி வீட்டில் தங்கியிருந்தான். போர் எவ்வாறு முடியுமோ என்று - இருபக்கத்தினரும் ஐயுறும் வகையில் அத்துணைக் கடு மையாக நடைபெற்றது. சளுக்கியப் படைகள் ஒரேமுக மாகத் திரண்டு இராசாதிராசன் வீற்றிருந்த யானையைத் தாக்கின. அதனால், அவ்யானையும் இறக்கவே, அதன் மீதிருந்த இராசாதிராசனும் பகைவர் அம்பிற்கு இலக்காகி விண்ணுலகெய்தினான். குந்தளப் படைகள் சோணாட்டுப் படைகளை நாற்புறத்திலும் தாக்கவே, அப் படைகள் அதனைப் பொறுக்க முடியாமல் குழப்பமடைந்து புறங்காட்டத் தொடங்கின. அந்நிலையில் இரண்டாம் இராசேந்திர சோழன் தன் பட்டத்து யானைமீதேறிப் போர்க்களஞ்சென்று, ' அஞ்சேல்! அஞ்சேல்!' என்று அபயங்கூறிச் சோணாட்டுப் படைகட்கு வீரவுணர்ச்சியுண்டுபண்ணி, அப்படைகளுள் அமைதி நிலவுமாறுசெய்து, மீண்டும் சளுக்கியருடன் போர்செய்யத் 1. ' செப்பருந் தீர்த்தக் கொப்பத்து' என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டிருத்தலால் இது தீர்த்தச் சிறப்பு வாய்ந்த ஒரு தலமாதல் வேண்டும். (S. I. I., Vol. V, No. 644.) 2. S. I. J., Vol. V, No. 647; Ibid, Vol. III, No. 39 Ep. Car., Vol. VIII part JI Sb. 325; Ibid, Vol. VIII SK. 118; Bombay gaz., Vol, IV, page 441.