பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசாதிராச சோழன் 209 தொடங்கினான்.! இராசேந்திரன் ஏறியிருந்த யானையைச் சளுக்கியப் படைகள் முன்போல ஒருமுகமாகத் தாக் கவே அவ் யானையின் நெற்றியில் அம்புகள் தைத்தன. ஆகவமல்லனுடைய கூரிய அம்புகள் இராசேந்திரனுடைய குன்றுபோன்ற புயத்திலும் தொடையிலும் தைத்துப் புண்படுத்தின. அதுபோது யானைகளின் மேலிருந்து போர் புரிந்துகொண்டிருந்த சோணாட்டு வீரர் பலர் உயிர் துறந்தனர். எனினும், சளுக்கியப் படைத் தலை வர்களாகிய சயசிங்கன், புலகேசி, தசபன்மன், அசோ கையன், ஆரையன், மொட்டையன், நன்னி நுளம் பன் - என்போர் இராசேந்திரனால் கொல்லப்பட்டனர். மேலைச்சளுக்கிய மன்னனாகிய ஆகவமல்லனும் தோல்வி யுற்றோடினான். வன்னியரேவன், துத்தன், குண்டமையன் என்ற எஞ்சியிருந்த சளுக்கியப் படைத் தலைவர்களும் மற்றும் பல சளுக்கிய அரச குமாரர்களும் போர்க் களத்தில் நிற்க முடியாமல் அஞ்சிப் புறங்காட்டி யோடி விட்டனர். இறுதியில் நம் இராசேந்திரனே வெற்றித் திருவைமணந்து வாகைசூடினான். சளுக்கியருடைய சத் துரு பயங்கரன், கரபத்திரன், மூலபத்திரன் என்ற பட் டத்து யானைகளையும் வராகக் கொடியையும் சக்தி யவ்வை, சாங்கப்பை முதலான கோப்பெருந் தேவியரை யும் இராசேந்திரன் கைப்பற்றிக்கொண்டான். அன்றியும் சளுக்கியர் போர்க்களத்தில் விட்டோடிய எண்ணிறந்த யானைகளும் குதிரைகளும் ஒட்டகங்களும் பிற பொருள் களும் இராசேந்திரனுக்கு உரியவாயின. பின்னர், சளுக்கி யர் நகரமாகிய கொல்லாபுரத்தில் ஒரு வெற்றித்தூணும் நிறுவப்பட்டது. இரண்டாம் இராசேந்திரன், அப்போர்க் களத்திலே பார்த்திபரானோர் முன் செய்தறியாததொன் றைத் தான் செய்யக் கருதிப் பகைஞர் அம்புகள் தைத்த 1. S. I, I., Vol. VII, Nos. 885 and 886; 1bid, Vol. V. No. 647; Ep. Car., Vol. X, Mulbagal 107. 2. Ibid, Vol. III, No. 29; Ibid, Vol. V, No. 644. 3. Ibid, Vol, V, No.644 14