பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 பிற்காலச் சோழர் சரித்திரம் புண்களிலிருந்து ஒழுகும் செந்நீரைப் புதுப்புனலால் நீக் கியதுபோல விசயாபிடேகஞ் செய்துகொண்டு சோழச் சக்கரவர்த்தியாக முடிசூடிக்கொண்டான் 1; பிறகு, போரிற் கிடைத்த பல்வகைப் பொருள்களுடன் வெற்றி வேந்த னாய்த் தன் தலை நகராகிய கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வந்து சேர்ந்தான். கொப்பத்துப் போர் நிகழ்ச்சிகள் எல் லாம் இராசாதிராசன் தம்பியாகிய இரண்டாம் இராசேந்திர சோழன் கல்வெட்டுக்களில் மிகத் தெளிவாகச் சொல்லப் பட்டிருக்கின்றன. இனி, அப்போர் நிகழ்ச்சிகள் எல்லாம் ஆகவமல்லன் கல்வெட்டுக்களில் காணப்படவில்லை. அவன் தன் பகைஞ ராகிய சோழரால் தானும் தன் நாடும் அடைந்த பரிப வங்களைத் தன் நாட்டுக் கல்வெட்டுக்களில் எங்ஙனம் பொறித்து வைத்திருத்தல் கூடும் - அவ்வாறு செய்வது அவன் பெருமைக்கும் புகழுக்கும் இழுக்கைத் தரு மன்றோ? அதுபற்றியே அவன் கல்வெட்டுக்களில் கொப்பத்துப் போர் நிகழ்ச்சிகள் காணப்படவில்லை என லாம். ஆயினும், ஆகவமல்லன் இறந்த பிறகு கி. பி. 1071-ஆம் ஆண்டில் வரையப்பெற்ற மேலைச்சளுக்கியர் கல்வெட்டுக்கள் இரண்டில் அப்போர் நிகழ்ச்சிகளுள் சில, குறிப்பாகக் கூறப்பட்டிருக்கின்றன. அவற்றில் தமிழ் வேந்தனாகிய பாண்டிய சோழன் என்பான், தன் முன்னோர் கைக்கொண்ட உயர்ந்த முறைகட்கு முரணாக பெள் வோலா 2 நாட்டிற் பெரும் படையுடன் புகுந்து சைன கோயில்கள் உள்ளிட்ட பலவற்றையும் எரியூட்டி அழித் தான் என்றும் அத் தீச்செயல் காரணமாக ஆகவமல்ல னால் போரிற் கொல்லப்பட்டா னென்றும் குறிக்கப்பட்டி ருக்கின்றன. அக் கல்வெட்டுக்கள் கொப்பத்துப் போர் 1. S. 1, 1., No. 647. 2. Belvola. 3. Ep. Ind., Vol. XV, No. 23; Sorab 325. Ep. Car., Vol. VIII,