பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 பிற்காலச் சோழர் சரித்திரம் என்னும் பட்டம் புனைந்துகொண்டமை முன்னர் விளக் கப்பட்டது. வேறு சில சிறப்புப் பெயர்களும் அந்நாளில் இவனுக்கு வழங்கியுள்ளன என்பது கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது. அவை, சயங்கொண்ட சோழன், ஆகவமல்ல குலாந்தகன், கல்யாணபுரங்கொண்ட சோழன், வீரராசேந்திரவர்மன் என்பனவாம். இவன் பல அரசர் களை வென்று அசுவமேதம் செய்து அவர்கள் வணங்க வீற்றிருந்த காரணம்பற்றிச் சயங்கொண்ட சோழன் என் னும் சிறப்புப் பெயர் எய்தினான்.1 மேலைச் சளுக்கியர் தலை நகரை எறிந்து அதனைக் கைப்பற்றி அங்கு வீராபிடேகஞ் செய்துகொண்டமையால் கல்யாணபுரங் கொண்ட சோழன் 2 என்று வழங்கப்பெற்றனன் 3. ஆகவமல்ல குலாந்தகன் 4 என்பது ஆகவமல்லன் குலத்திற்கு யமனைப்போன்றவன் என்று பொருள்படும். இவன் அவ்வேந்தனுக்கும் அவன் மக்களுக்கும் அடிக்கடி இன்னல் விளைத்து வந்தமைபற்றி இவனுக்கு அப்பட்டம் வழங்கியதாதல் வேண்டும். வீர ராசேந்திரன் என்பது இவன் தன் வாழ்நாளில் பெருவீர னாகத் திகழ்ந்தமையால எய்திய சிறப்புப்பெயர் எனலாம் இவன், தன் உடன்பிறந்தார்க்கும் புதல்வர்க்கும் தான் வென்ற நாடுகளில் ஆட்சியுரிமை வழங்கி அவர்கள் அந் நாடுகளில் அரசாண்டு வருமாறு ஏற்பாடு செய்தான் என் றும் தன் வாழ் நாளில் பரிமேத வேள்வி புரிந்து சிறப் பெய்தினான் என்றும் இவன் கல்வெட்டுக்கள் கூறுகின் றன. இவனுக்குக் கங்கைகொண்ட சோழபுரமே தலை நக 00 1. S. I. I., Vol. V, Nos. 520, 633 and 978. Ibid, Vol. VIII, Nos. 82, 199 and 680. 2. Ibid, Vol. V, No. 465; Ins. 258 of 1910. 3. தொண்டமண்டலத்திலுள்ள ஆமூர்க் கோட்டம் இவன் காலத்தில் கல்யாணபுரங்கொண்ட சோழக் கோட்டம் என்று வழங்கிற்று . (Ins. 258 of 1910) 4. Ins. 188 of 1919.