பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசாதிராச சோழன் 213 ராயிருந்தது 1. இவன் பட்டத்தரசி, திரைலோக்கிய முடை யாள் ஆவள் 2. உலகுடைய பிராட்டி என்னும் ஒரு மனைவி இவ்வேந்தனுக்கு இருந்தனள் என்பது கன்னியாகுமரிக் கல்வெட்டினால் அறியப்படுகின்றது 3. அவ்விருவரும் வெவ்வேறு மனைவியரோ அன்றி ஒருவரோ என்பது தெரியவில்லை. இவ்வேந்தன் ஆட்சிக்காலத்தில் அரசாங்க அலுவல் களில் அமர்ந்து நாட்டை நன்கு பாதுகாத்துவந்த அரசி யல் தலைவர்கள் பலர் ஆவர். அன்றியும், இவனுக்குக் கப்பஞ் செலுத்திவந்த குறுநிலமன்னரும் இருந்தனர். இவன் குந்தள நாடு முதலானவற்றிற்குப் படையெடுத் துச்சென்று அவ்விடங்களில் போர் புரிந்து வெற்றியுடன் தன் நாட்டிற்குத் திரும்புவதற்குச் சில திங்களாதல் சென்றி ருத்தல் வேண்டும் என்பது திண்ணம். அக் காலங் களில் சோழ நாட்டில் அமைதி நிலவுமாறு ஆட்சியை இனிது நடத்திவந்தவர்கள் இவன் தம்பிமார்களும் அரசியல் அதிகாரிகளுமேயாவர். சில தலைவர்கள் தம் சக்கர வர்த்தியோடு பகைப்புலத்திற்குச் சென்று வீரத்தோடு போர்புரிந்து புகழ் எய்தியுள்ளனர். எனவே, இவன் காலத்து அரசியல் தலைவருள் சிலரை ஈண்டுக் குறிப்பதும் பொருத்தமேயாம். 1. தண்ட நாயகன் அப்பிமையனாகிய இராசேந்திர சோழ பிரமமாராயன் :- இவன் இராசாதிராசன் படைத் தலைவர்களுள் ஒருவன் ; கடப்பை ஜில்லாவிலுள்ள வல் லூரைத் தன் தலை நகராகக் கொண்டு மகாராசவாடி ஏழா யிரத்திற்கு அரசப்பிரதியாகவிருந்து ஆட்சிபுரிந்தவன் 4 1. S. I. I., Vol. V, No. 978. 2. Ins. 446 of 1918. 3. Travancore Archaeological Series, Vol. 1, pp. 162-163. 4. Ep. Car., Vol. X, Chintamani 30.