பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214) பிற்காலச் சோழர் சரித்திரம் இவன் இராசேந்திரசோழ பிரமமாராயன் என்னும் பட்டம் பெற்றிருத்தலால் அந்தணர் குலத்தினன் என்பதும் முதல் இராசேந்திரசோழன் காலத்தில் அப்பட்டம் எய் தியவன் என்பதும் நன்கு புலனாகின்றன. ஆகவே, இவ னது நீண்ட அனுபவம்பற்றி, இராசாதிராசன் இவனை அப்பகுதியில் அரசப்பிரதிநிதியாக அமர்த்தினன் எனலாம்.! 2. சேனாபதி இராசேந்திரசோழ மாவலிவாணராயன் :இவன் இராசாதிராசன் படைத்தலைவர்களுள் ஒருவன் முதல் இராசேந்திர சோழனால் பட்டம் வழங்கிப் பாராட்டப் பெற்றவன் ; புதுச்சேரிக்கு அண்மையிலுள்ள திரிபுவனியில் ஆண்டு ஒன்றிற்கு 12000 கலம் நெல் வருவாயுள்ள 72 வேலி நிலத்தைச் சில திருவிழாக்களும் ஒரு கல்லூரி யும் நடத்துவதற்கு நிவந்தமாக வழங்கிய பெருங் கொடை வள்ளல்.2 இவன் கோயிலில் திருவாய்மொழி விண்ணப்பஞ் செய்வதற்கு ஏற்பாடு செய்திருத்தலால் வைணவ சமயத் தில் பெரும்பற்றும் ஆழ்வார்களிடத்தில் ஈடுபாடும் உடைய வன் என்று தெரிகிறது. 3. சேனாபதி சயங்கொண்டசோழ வாணகோவரை யன் :- இவன் இராசாதிராசன் படைத்தலைவர்களுள் ஒரு வன் ; மைசூர் இராச்சியத்திலுள்ள தடிகைப்பாடி நாட்டில் இவ்வேந்தன் ஆட்சிக்காலத்தில் அரசப் பிரதிநிதியாக இருந்தவன்.3 4. அதிகாரிகள் பாராசிரயன் வாசுதேவ நாராயண னாகிய உலகளந்த சோழ பிரமமாராயர் :- இவர் இரா சாதிராசனுடைய குருதேவர் ஆவர். இவருக்கு வழங்கப் பெற்றுள்ள பட்டத்தை நோக்குங்கால், இராசாதிராசன் 1. Ep. Car., Vol. IX, Dv. 76. 2. Ins. 176 of 1919. 3. Ep. Car., Vol. IX, NL. 25. 4. S. I. I., Vol. VII, No. 1046.