பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 பிற்காலச் சோழர் சரித்திரம் போன்ற இவனுடைய பிற கல்வெட்டுக்களையும் ஆராய்ந்து பார்க்குமிடத்து, இவன் ஆட்சியில் அரசாங்க அலுவல்கள் எல்லாம் மிக்க அமைதியாகவே நடைபெற்று வந்தன என்பதும் படைத் தலைவர்களும் மற்ற அரசியல் அதிகாரிகளும் இவன்பால் பேரன்புடன் ஒழுகி வந்தனர் என்பதும் வெளியாகின்றன. எனவே, பில்ஹணர் கூறி யுள்ளவாறு உள் நாட்டில் குழப்பமும் அமைதியின்மை யும் ஏற்பட்டமைக்குச் சிறிதும் ஆதாரமின்மை காண்க. ஆகவே, சோழ நாட்டில் நிகழ்ந்த குழப்பத்தில் அதிரா சேந்திரன் கொல்லப்பட்டான் என்று அவர் கூறியிருப் பது உண்மையன்று என்பது உணரற்பாலதாகும். சோழ மண்டலத்திற்கு வடக்கே பன்னூறு மைல்களுக் கப்பாலுள்ள கல்யாண புரத்திலிருந்தபில்ஹணர், சோணாட்டு நிகழ்ச்சிகளை உண்மையாக உணர்ந்து கோடற்குத் தக்க வாய்ப்பும் அக்காலத்தில் இல்லை, யாண்டும் நிகழும் அரிய நிகழ்ச்சிகளையும் அரசாங்கச் செய்திகளையும் அறிதற்குத்தக்க கருவிகள் கிடைக்கின்ற இந்நாட்களில் கூட உண்மைக்கு மாறான பல செய்திகள் வெளிவந்து பரவுகின்றன. இத்தகைய கருவிகளுள் ஒன்றுமில்லாத பதினொன்றாம் நூற்றாண்டில் தமிழ் வழங்காத வடநாட்டிலிருந்த வடமொழிப் புலவர் ஒருவர் சோழ நாட்டில் நிகழ்ந்த நிகழ்ச்சி யொன்றை எங்ஙனம் உண்மையாக உணர்ந்து கூற முடியும்? இனி, தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள கூகூரில் காணப் படும் கல்வெட்டொன்று அதிராசேந்திரன் தன் ஆட்சியின் மூன்றாம் ஆண்டில் கொடிய நோய்வாய்ப்பட்டுத் துன்புற் றான் என்றும் இவன் உடல் நலம் பெறும் பொருட்டு அவ் வூர்க் கோயிலில் இறைவன் திருமுன்னர் நாள்தோறும் தேவாரப் பதிகங்கள் இருமுறை ஓதப்பெற்று வந்தன என்றும் கூறுகின்றது. இவனது ஆட்சியின் மூன்றாம் 1. Ins. 280 of 1917.