பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிராசேந்திர சோழன் 257 ஆண்டு இருநூறாம் நாளுக்குப் பிறகு இவன் கல்வெட் டுக்கள் யாண்டும் காணப்படவில்லை. எனவே, நோய் வாய்ப்பட்டிருந்த இவ்வேந்தன் நலமுறாமல் அந்நாட்களில் உயிர் துறந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். ஆகவே, இவன் உள் நாட்டுக் கலகத்தில் கொல்லப்பட் டான் என்பது பொருந்தாமை காண்க. இனி, ஒரு சோழமன்னன் தில்லைமா நகரில் சித்திர கூடத்திலிருந்த திருமால் மூர்த்தத்தைப் பெயர்த்துக் கட லில் எறிந்தமையோடு வைணவர்களையுந் துன்புறுத்தி னான் என்றும் அதுபற்றி வைணவ ஆசாரியராகிய இராமாநுசர் தமிழ் நாட்டைத்துறந்து மைசூர் நாட்டிற் குப் போய்த் தங்கநேர்ந்தது என்றும் அந்நாட்களில் அவர் செய்த மாரண மந்திரத்தினால் அவ்வரசன் இறந்தனன் என்றும் வைணவர் அவனையே கிருமிகண்ட சோழன் என்பர் என்றும் திவ்யசூரி சரிதம், யதிராசவைபவம், இராமாநுசாசார்ய திவ்ய சரிதை ஆகிய வைணவ நூல் கள்2 கூறுகின்றன. அன்றியும், அவன் வைணவர்கட்கு இன்னல் இழைத்தமைபற்றிச் சோழர் மரபையே அழித்து ஒழித்துவிடுவதாகத் திருவாரூர்த் தியாகராசப் பெருமான் உரைத்தருளினார் என்றும் அத் திவ்யசூரி சரிதம் உணர்த்துகின்றது 3. நம் அதிராசேந்திரன் முடிசூடிய சில திங்கள்களில் இறந்தமையாலும் பண்டைச் சோழர் மரபு இவனோடு இறுதி எய்தியமையாலும் இவனே தில் லைச் சித்திரகூடத்தைச் சிதைத்துத் திருமாலைக் கடலில் கிடத்திய கிருமிகண்ட சோழனாயிருத்தல் வேண்டும் என் றும் அக்கொடுஞ்செயல் பற்றிச் சோழ நாட்டில் நிகழ்ந்த கலகத்தில் இவன் கொல்லப்பட்டிருத்தல் வேண்டும் என் றும் வரலாற்று ஆராய்ச்சியாளருள் சிலர் கருதுகின்ற 1. S. I. I., Vol. HI, No. 57. 2. திவ்ய சூரிசரிதம், பக்கங்கள் 216-218. 3. திவ்ய சூரிசரிதம், பக்கங்கள் 218-19. 17