பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ மன்னர்களின் மெய்க்கீர்த்திகள் 289 | தனிச்சொல் என வாங்கு சுரிதகம் பவளச் செழுஞ்சுடர் மரகதப் பாசடைப் பசும்பொன் மாச்சினை விசும்பகம் புதைக்கும் போதியந் திருநிழற் புனிதநிற் பரவுதும் மேதகு நந்தி புரி மன்னர் சுந்தரச் சோழர் வண்மையும் வனப்பும் திண்மையு முலகிற் சிறந்துவாழ் கெனவே. கட்டளைக் கலித்துறை 2இந்திர னே றக் கரியளித் தார்பரி யேழளித்தார் செந்திரு மேனித் தினகரற் குச்சிவ னார்மணத்துப் பைந்துகி லேறப் பல்லக்களித்தார் பழையாறை நகர்ச் சுந்தரச்சோழரை யாவரொப் பார்களித் தொன்னிலத்தே. (2) முதல் இராசராச சோழன் 3 அருமொழிதன் கோயி லடலரசர் மிண்டித் திருமகு டக்கொடிக டேய்த்த-பருமணிகள் ஓதத் தமுதனைய வொண்ணுதலார் மென்மலராம் பாதத்தி னூன்றும் பரல். 1. நந்திபுரி என்பது பழையாறை நகராகும். 2. வீரசோழியம், அலங்காரப்படலம் பத்தாங்கலித்துறை யுரையிலுள்ள மேற்கோள். '3 வீரசோ. அலங். 12 மேற்கோள்; அருண்மொழிவர்மன் என்பது முதல் இராசராச சோழனது இயற் பெயராகும். அப் பெயர் அருமொழி எனவும் வழங்கப்பெற்றுள்ளது. இவ் வேந்தன் தன் பெயர்களால் வழங்குமாறு சோழ மண்டலத்தில் அமைத்த ஒன்பது வளநாடுகளுள் அருமொழி தேவவளநாடும் ஒன்று என்பது உணரத்தக்கது.