பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சோழர் நிலை

9

சோழ அரச குடும்பத்தினருள் சிலர் அங்கு வாழ்ந்து வந்தனர் என்பது கல்வெட்டுக்களால் புலப்படுகின் றது. 1 எனவே, அது சோழரது பழைய தலை நகரங் களுள் ஒன்றாயிருத்தல்வேண்டும் என்பது வெளியாதல் காண்க. அந்நகரில் தான், பல்லவர் காலத்தில் குறு நில மன்னராயிருந்த சோழர் இருந்தனர் என்பது ஈண்டு உணரற்பாலதாகும்.

சமயகுரவராகிய சுந்தரமூர்த்திகள் கூறியுள்ள கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர் என்பார் கி. பி. ஆறாம் நூற் றாண்டிலாதல் அதற்குமுன்னராதல் இருந்திருத்தல் வேண் டும். அவரைப்பற்றிய தெளிவான செய்திகள் கிடைக்க வில்லை .

கி. பி. ஏழாம் நூற்றாண்டின் இடையில் பாண்டி மண் டலத்தில் மதுரை மாநகரிலிருந்து ஆட்சிபுரிந்தவனும் அறு பான்மும்மை நாயன்மார்களுள் ஒருவனும் சுந்தர மூர்த்தி களால் “நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன்2 " என்று திருத்தொண்டத் தொகையில் பாராட்டப்பெற்ற வனும் ஆகிய பாண்டியன் அரிகேசரி மாறவர்மன் மனைவி மங்கையர்க்கரசி, ஒரு சோழ மன்னன் மகள் ஆவள். இதனை, 'மங்கையர்க்கரசி வளவர்கோன்பாவை வரிவளைக்கை மடமானி -- பங்கயச் செல்வி பாண்டிமாதேவி' 3 என் னும் திருஞானசம்பந்தர் அருட்பாடலால் நன்கறிய லாம். மங்கையர்க்கரசியின் தந்தை மணிமுடிச் சோழன் என்னும் பெயரினன் என்பது அவ்வடிகள் திருவாக்கினால் உணரப்படுகின்றது. ஆகவே, கி. பி. ஏழாம் நூற் றாண்டின் இடைப்பகுதியில் மணிமுடிச்சோழன் என்ற



1. Ins. 249 of 1923; S. I. I. Vol. III, No. 205. 2 திருத்தொண்டத்தொகை--பாடல் 8. 3. திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் தேவாரம் - திரு வாலவாய்-1 4. ஷை ஷ6