பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨
இரண்டாம் பதிப்பின் முகவுரை

இச் சரித்திர நூலின் முதற் பதிப்பு இன்றைக்கு ஐந்து ஆண்டுகட்கு முன் வெளிவந்தது. இந்நூலை யான் எழுதியமைக்குரிய காரணங்களும் இதனைப்பற்றிய பிற செய்திகளும் இதன் பின்னேயுள்ள முதற் பதிப்பின் முகவுரையால் நன்கு விளங்கும். பின்னிகழ்ந்த எனது ஆராய்ச்சியில் அறிந்துகொண்ட செய்திகளுள் சிலவும் இப்பதிப்பில் உரிய இடங்களில் சேர்க்கப்பெற்றுள்ளன. சென்னையிலும் அண்ணாமலை நகரிலுமுள்ள பல்கலைக்கழகங்களின் தேர்விற்குப் பயின்றுகொண்டிருக்கும் மாணவர்கட்கு இந்நூல் பாடமாக விருத்தலால் இவ்விரண்டாம் பதிப்பை விரைவில் வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் இந்நூலின் இறுதியில் பிற் சேர்க்கையாகச் சேர்த்து வெளியிடக் கருதியிருந்தவற்றுள் சிலவற்றை இப்பதிப்பில் சேர்க்க முடியாமற் போயிற்று.

இவ்விரண்டாம் பதிப்பை வெளியிட்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தார்க்கும் இந்நூல் அச்சாகுங்கால் 'புரூப்' முதலியன திருத்தி அன்புடன் உதவிபுரிந்த என் அரிய நண்பர் தமிழாராய்ச்சித்துறை விரிவுரையாளர் வித்வான் க. வெள்ளை வாரணர் அவர்கட்கும் எனது நன்றி உரியதாகும்.

இங்ஙனம்,

அண்ணாமலைநகர், T. V. சதாசிவ பண்டாரத்தார்

16-9-'54