பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்காலச் சோழர் சரித்திரம் இவன், சைவ சமயத்தில் பெரிதும் பற்றுடையவனா யிருந்தாலும், வைணவம், சமணம் முதலான புறச்சமயங்க ளிடத்தில் சிறிதும் வெறுப்புக் காட்டியவனல்லன், இவன், தான் அமைத்த கண்டராதித்தச் சதுர்வேதிமங்கலம் என்ற நகரில் கண்டராதித்த விண்ணகரம் என்னுந் திருமால் கோட் டம் ஒன்று எடுப்பித்திருப்பதும் 1 தென்னார்க்காடு ஜில்லா விலுள்ள பள்ளிச்சந்தல் என்ற ஊரில் இவன் பெயரால் கண்டராதித்தப் பெரும்பள்ளி என்னும் அமண்பள்ளியொன்று காணப்படுவதும்? இவன் புறச்சமயத்தினரையும் நன்கு மதித்து அவர்கள் பால் அன்புடன் ஒழுகியவன் என்பதை இனிது விளக்குவனவாகும், எனவே, இவ்வேந்தன், ‘ விரிவிலா அறிவி னார்கள் வேறெரு சமயஞ் செய்து எரிவினாற் சொன்ன ரேனும் எம்பிராற் கேற்ற தாகும்'3 என்ற திருநாவுக்கரசு சுவாமிகள் திருவாக்கின் உண்மை யைத் தெள்ளிதின் உணர்ந்து, அதனைத் தன் வாழ்க்கையில் உறுதியாகக் கடைப்பிடித்தவன் என்பது சிறிதும் புனைந் துரையாகாதென்க. இனி, இவ்வரசன் இருமனைவியரை மணந்தவன் என்பது கல்வெட்டுகளால் புலனாகின்றது. அவ்வரசி யர், வீரநாரணி, செம்பியன்மாதேவி என்போர். அவர் களுள் வீரநாரணியே முதல் மனைவியாவள் 4. கண்டரா தித்தன் முடிசூட்டப்பெறுவதற்கு முன்னர் அவ்வம்மை இறந்தனள் என்று தெரிகிறது. மற்றொரு மனைவியாகிய செம்பியன்மாதேவி, மழநாட்டுச் சிற்றரசன் ஒருவன் மகள் என்பது ' மழவரையர் மகளார் ஸ்ரீகண்டராதித்தப் பெருமாள் தேவியார் செம்பியன்மாதேவியார் ' என்ற கல்வெட்டுப்பகுதியால் நன்கறியக்கிடக்கின்றது. அவ் -- -- - 1. Ins. 78 of 1920 2. Ins. 448 of 1938 3. திரு நாவுக்கரசுசுவாமிகள் தேவாரம்- திருப்பெருவேளூர்-பா. 9 4. Ins. 108 of 1906 5. S. I: I., Vol. III, No. 141.