பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

= 65 கண்டராதித்த சோழன் வரசியும் தன் கணவனைப்போல் மிகுந்த சிவபக்தியுடையவள் அவ்வம்மை, தன் கணவன் இறந்த பின்னர், . கி. பி. 1001-ஆம் ஆண்டுவரையில் உயிருடனிருந்தனள் என்பது விருத்தாசலம், திருவக்கரை ஆகிய ஊர்களிலுள்ள கல் வெட்டுக்களால் புலப்படுகிறது. எனவே, அவள் பல ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தனள் என்பது தேற்றம். தன் நீண்ட வாழ் நாளில் அம் மாதேவி புரிந்துள்ள அறங்கள் மிகப் பலவாம். அவையெல்லாம் உத்தம சோழன் ஆட்சியில் நன்கு விளக்கப்படும். கண்டராதித்தனுக்கு மும்முடிச் சோழன் என்ற மற் றொரு பெயரும் வழங்கியுள்ளது. சிதம்பரந் தாலுகாவி லுள்ள உடையார்குடியில் காணப்படுங் கல்வெட்டொன்று இவனை ' மேற்கெழுந்தருளிய தேவர்' 3 என்று குறிப் பிடுவதும் அறியற்பாலதாகும். அச்சொற்றொடரின் உண்மைப் பொருள் யாது என்பது தெரியவில்லை. இவன் மேற்றி சையில் பகைவரோடு போர் நிகழ்த்தி அதில் இறந்த செய்தி அவ்வாறு மங்கலவழக்காகக் கூறப்பட்டிருத்தல் வேண்டும் என்பது சில அறிஞர்கள் கொள்கை - பண்டைச் சோழ மன்னருள் சிலர், குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திரு மாவளவன்,5 குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்று சங்க நூல்களிலும் ' தொண்டைமானாற்றூர்த் துஞ்சின உடையார்'7 ‘ஆற்றூர்த் துஞ்சினதேவர், ஆனைமேற்றுஞ்சின உடையார்' 9 • பொன்மாளிகைத் துஞ்சின தேவர் ' 10 என்று 1. Ins. 48 of 1918; Ins. 200 of 1904. 2. Ins. 283 of 1908. 3. Ins. 540 of 1920. 4. Ep. Ind., Vol. XXVI, p. 84. 5. புறநானூறு--பாடல்கள் 58 & 60. ஷை - பாடல்கள் 34 & 46. 7. S. I. I., Vol. III, No. 42. 8. Ibid, Nos. 15, 16 and 17. 9. Ibid, Vol. V, No 720. 10. Ibid, Nos. 723 and 980. '