பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பிற்காலச் சோழர் சரித்திரம் கல்வெட்டுக்களிலும் சொல்லப்பட்டுள்ளனர். ஈண்டு எடுத்துக் காட்டப்பெற்ற அத்தொடர்கள் எல்லாம் அவ் வேந்தர்கள் எவ்வெவ்விடங்களில் இறந்தனர் என்ற செய்தியை மிகத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன. ஆனால், ' மேற்கெழுந்தருளிய ' என்ற அடைமொழி அவற் றைப்போல் இறந்த செய்தியை உணர்த்தவில்லை. இவ் வேந்தன் இறந்த செய்தி கூறப்பட்டிருந்தால் அதற்குரிய அடைமொழி அக்கால ஒழுகலாற்றின்படி அமைந்திருக்கும் என்பது திண்ணம். எனவே, ' மேற்கெழுந்தருளிய' என்ற தொடர்க்கு வேறு பொருள் இருத்தல் வேண்டும். அது, சோழநாட்டிற்கு மேற்கேயுள்ள நாடுகளுக்கு இவ் வரசன் தல யாத்திரை சென்று திரும்பி வராமையை' ஒருகால் குறிப்பினுங் குறிக்கலாம். சிவஞானியாக நிலவிய இம் முடிமன்னன், தன் அரசைத் துறந்து அங்ஙனம் போயிருத்தல் இயல்பேயாம். பங்களூர் ஜில்லாவிற் காணப் படும் கல்வெட்டொன்று! இவனைச் • சிவஞான கண்ட ராதித்தர்' என்று குறிப்பிடுவதால் இவனுக்கும் மைசூர் இராச்சியத்தின் தென்பகுதியிலிருந்த கங்க நாட்டிற்கும் ஏதேனும் ஒரு தொடர்பு இருந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு பெறப்படுகின்றது. அக் கல்வெட்டுச் சிதைந்திருத்தலால் இவனைப்பற்றி அஃது உணர்த்துஞ் செய்திகளை அறிய இயலவில்லை. எனினும், இவன் படைத்தலைவன் ஒருவன், அந்நாட்டு மழவூர்க் கோயிலில். கண்டராதித்தவிடங்கரையும் உமா பரமேசுவரியாரையும் எழுந்தருளுவித்து வழிபாட்டிற்கு நிவந்தம் அளித்துள்ளனன் என்பது அக்கல்வெட்டால் அறியக்கிடக்கின்றது. சோழ நாட்டிற்கு வடமேற்கில் அத்துணைச் சேய்மையிலுள்ள கங்க நாட்டில் கண்டராதித்தவிடங்கர் எழுந்தருளுவிக்கப் பெற்றமைக்குத் தக்க காரணம் இருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. இனி, மைசூர் இராச்சியத்தில் நந்தி என்னும் ஊரி லுள்ள ஒரு சிவன் கோயிலில் ஓர் அரசர் படிமம் உளது 1. Ep. Car., Vol. IX, Chennapatinam No. 92.