பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டராதித்த சோழன் அது சோழ மன்னரது படிமம் என்று அங்கு வழங்கப்படு கின்றது.' அது யோகத்தில் வீற்றிருக்கும் நிலையில் அமைக்கப்பெற்றுளது. கோனேரிராசபுரத்திலுள்ள கண்ட ராதித்தன் படிமத்திற்கும் அதற்கும் வேறுபாடு மிகுதி யாகக் காணப்படவில்லை. எனவே, அது நம் கண்ட ராதித்த சோழனை நினைவுகூர்தற்கு வைக்கப்பெற்ற உருவச்சிலையாதல் வேண்டும். ஆகவே, இச்செய்தி மேலே குறிப்பிட்ட வரலாற்றிற்குச் சான்றாக நிற்றல் காண்க. சிவபத்தியும் தமிழ்ப் புலமையும் ஒருங்கே அமையப் பெற்ற இவ்வேந்தன் தான் வணங்கிய திருப்பதிகளில் எழுந்தருளியுள்ள இறைவன்மீது பல பதிகங்கள் பாடி யிருத்தல் கூடும். அவற்றுள், கோயிற் பதிகம் ஒன்றே இந்நாளில் நமக்குக் கிடைத்துளது. கண்டராதித்தனுக்குப் பல ஆண்டுகள் வரையில் மகப் பேறின்றி இறுதியில் செம்பியன் மாதேவிபால் ஒரு தவப் புதல்வன் பிறந்தனன். அவனுக்கு மதுராந்தகன் எனவும் உத்தமசோழன் எனவும் இரு பெயரிட்டு வழங்கலா யினர்.2 தன் மகன் சிறு குழந்தையா யிருந்தமையால் தன் தம்பி அரிஞ்சயனுக்கு இளவரசுப் பட்டங்கட்டி அரசியல் துறையில் பழக்குவது இவனது இன்றியமையாத கடமை யாயிற்று. ஆகவே, இவன் கி. பி. 953 - ஆம் ஆண்டில் அரிஞ்சயனை இளவரசனாக்கிப் பட்டமுங் கட்டினான். மதுராந் தகன் இளவரசனாயிருந்தபோது கண்டராதித்த சோழன் கி, பி. 957-ல் சிவபெருமான் திருவடி நீழல் எய்தி னான்.3 செம்பியன் மாதேவி, தன் இளம் புதல்வன் பால் வைத்த அன்பின் பெருக்கினால் அவனை ஓம்பி வளர்த்தலையே தன் கடமையாகக் கொண்டு சிவஞானியாக நிலவிய 1. Portrait Sculpture of South India, p. 29 2. Ep. Ind., Vol. XXII, No. 34, Verse, 22. S. I. 1.. Vol. III, No. 205. 3. Ep. Ind., Vol. XXVI, Page 84.