I 8 உதகமண்டலம், மே மாதம், 15ஆம் தேதி, இரவு : இன்று என் மனம் எல்லேயற்ற உற்சாகத்தை அடைந்திருக் கிறது. மாலையில் இவ்வூர் பொடானிகல் கார்டனில் நடை பெற்ற மலர்க் காட்சிக்குப் போயிருந்தேன். பிளவர் ஷோவைப் பற்றி நண்பர்கள் வானளாவப் புகழ்ந்து பெருமைபேசிய அருமை இன்று இங்கு அதைப் பார்த்த பின்பல்லவா தெரிகிறது! அடடா! بم உலகத்தில் இத்தனை விதமான நிறமும், இத்தனை வகை உருவமு முள்ள பூக்கள் இருக்கின்றன என்று இன்று மொத்தமாகத் தெரிந்து விட்டது. வர்ணக் களஞ்சியம் என்பதா ? இயற்கையின் பலவேறு நிறப் புன்னகைகள் என்பதா? என்ன அழகு! என்ன அழகு! இன்றையப் பூக்காட்சியில் என் மனத்தைத் துள்ளச் செய்து பெருமிதமூட்டும் வேருெகு நிகழ்ச்சியும் நடந்ததே! o வகை வகையான பூக்காட்சி முழுவதும் சுற்றிப்பார்த்த வியப்பில் மனம் லயித்து அந்தப் பூங்காவின் புல்வெளியில் உட்கார்த்தேன். சுற் றிலும் நீல மலைகளின் முடிகளில் மேகம் நகரும் அழகு 'பூக்கள், பகம் புல்வெளிகள், ஊசி );T + si நம் தாண் துணுக யூகலிப்டஸ் மரங்கள். உருவேக் கிழங்கு வயல்கள், இயற்கையின் செளந்தரிய வெள்ள மாய் எழுதாக் கவிதைகளாய்ப் பரந்து கிடக்கும் இவைகளுக்கு முன் என் கவிதைகள் எம்மாத்திரம்' என்பதுபோல் ஒரு தாழ்வு மனப்பான்மை எனக்கு உண்டாயிற்று. திறங்களின் கொள்ளை யாய், எழில்களின் வகைகளாய் அந்த மலர்க் காட்சிகளையும், மலேகளேயும், மரங்களேயும் காணும்போது என்னுடைய கவிதை கள் இவற்றை எல்லாம்.விட அப்படி ஒன்றும் பெரியன அல்ல என்பதுபோல் சிலுமைப்பட்டு ஏங்கினேன். மனத்தில் ஒரு வறட்சி. நாம் பெரிதாக எதையுமே செய்துவிடவில்லை என்கிற மாதிரி மூளித் தன்மை குடைகிறது. !, 'இயற்கை. பொருள்களைப் படைத்து அவற்றுக்கு விதவித மான அழகுகளைத் தந்தது. அந்தப் பொருள்களைக் கொண்டு தான் மொழிக்குச் சொற்கள் கிடைத்தன. அந்தப் பொருள் களின் அழகுகளைக் கொண்டுதான் சொற்களின் அர்த்தங்களுக்கு அழகு ஏற்பட்டது. சொற்களும் அர்த்தங்களும் அவற்றுக்கு அழகு களும் ஏற்பட்டிருக்காவிட்டால் நீ பாடியிருக்க முடியுமா ? நீ சொற்களின் தரகன். சொற்கள் இயற்கையின் நாமங்கள். உன்னுல் முடிந்தது அவற்றை இணைத்ததுதான்' என்று உள்ளத் கில் ஏதோ குத்திக் காட்டுகிறது. தாங்கிக் கொள்ள முடியாத
பக்கம்:பிள்ளைக்கலி.pdf/116
Appearance