உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளைக்கலி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127


வரையில் பொய்த்துவிட்டது. எந்த நியதியாலோ, அவள் அழகில் பணிவில்லை. அந்தக் கம்பீரம் யாரையும் அசைத்து மண்டியிடச் செய்யும். மண மேடையில் என் மாலையை ஏற்றுக் கொள்ளாமல் அவள் மறைந்த பின், எப்படி இந்தச் சந்திப்பு அபூர்வமாக ஏற்பட்டது ? எந்த நிகழ்வின் உந்தலால் அவமானம் ஏந்தி, தெரிந்தவர் முன்பு இகழ்வுற்று அதை மறந்து வாழ இந்தத் துார துரமான இடத்திற்கு வந்தேனே, அங்கும் அவள் எதிர்ப்பட்டால், எப்படி இருக்கும் ? கண்டதும் எனக்கேற்பட்ட கோபத்தைக் கணை தொடுக்க எண்ணி நிமிர்ந்தபோது, அவள் என்னைப் பார்த்தாள். என்னையே உற்றுப் பார்த்தாள். அவள் விழிகளில் மருட்சி ஏற்படவில்லை யென்ருலும், நினேவினுள்டே தெறித்த பழைய எண்ணக் கலவையாலோ என்னவோ, பேதை மயங்கிக் கீழே விழ, நான் கனையெய்வதை விட்டு, கனிவு எய்தினேன். அவளைத் துக்கிச் சாலை ஒரம் கிடத்தினேன். சிறிது நேரத்திலேயே அவள் முகம் விழித்தாள். மலே மடியில் சுகந்த காற்று வீசியது. அது சுமந்து வந்த செண்பக மலரின் நறுமணமும், நாசியைத் தழுவியது. நான் அவள் முகத்தை விரக்தியோடு நோக்கினேன். என்னுள்ளே அலைபாய்ந்த கணிவைக் கலைக்க முயன்றேன். அவளும் எழுந்து என்ன நோக் கிள்ை. ஆகா! அத்தக் கணம்: ஆத்மாவின் புத்துணர்வு மலர்ச்சி யால் தோன்றிய சிலிர்ப்பு எனக்கே. எனக்குக் கேடு செய்து விட்டவள். வாழ்க்கையில் மாபெரும் ஊறு விளைவித்து விட்டவள் என் முன்னே நின்று தவிக்கிருள். அவன் குற்றத்தை நான் மன்னிக்கத் தயார்! ஆளுல், அவள் உண்மைக் காரணத்தை ஒளியாது கூறிவிட வேண்டும். ஆம்! அவள் யாரைக் காதலிக் கிருள் ? ஏன் மண மேடையை உதறினுள் ? அது மட்டுமா ?? என்று என் உள்மனம் கொக்கி போட்டது. இன்னும் உண்டு இன்னும் உண்டு. என் இதயக்கடலின் ஆரவாரங்களின் உள்ளே துர்ய வெண்முத்து ஒன்று சுடர் வீசியது. அவள் என் மனைவி инт зајтsortг ?“ வெளியுலகில் ஆண்களுக்கென்று ஏற்பட்ட சூழ்நிலைப் பேச்சு என்னையும் மீறி மிடுக்குற வெளிப்பட்டது. உம் என்ன மன்னித்து விடுங்கள்! தவறு செய்து விட்டேன். ஆபத்து என்ற பரபரப்பில் ஒன்றும் தோன்ருமல் என் பாபக் கரங்களால் உங்களைத் திண்டிக் களங்கப்படுத்திவிட்டேன்...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/125&oldid=1395744" இலிருந்து மீள்விக்கப்பட்டது