பக்கம்:பிள்ளைக்கலி.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45


அப்போது, 'மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே' என்று தெருவோடும் பாடிக்கொண்டு செல்லும் ஒரு யாசகனின் பாட்டுக்கு இங்கே வேறு தாத்பர்யம் பிறக்கிறது. 'தெய்வங்கள் மனிதர்கள் ஆகவேண்டும்; மனிதப்பிறவிக்கு அவ்வளவு மகத்துவமும் உண்டு’ என்று ராமன் தனக்குத் தானே சொல்லிக் கொள்கிருன். இதற்குள் ஊர் ஜனங்கள் வந்து கூடிவிட்டார்கள். ஆகவே வீட்டினுள் இருந்தவர்கள் வெளியே வருகிருர்கள். தெருப் பிடிக்காத பெருங் கூட்டம். வயல் வெளிகளில் வேலை செய்பவர் களும் அதற்குள் ஓடிவந்து விட்டார்கள். கூட்டத்தில் தன் தாயைத் தவறிவிட்ட ஒரு சின்னஞ்சிறு குழந்தை வேகமாக ஓடிவந்து சீதையைக் கட்டிக்கொண்டு, 'அம்மா என்று அழுகிறது. 'நான் உன் அம்மா இல்லே, கண்ணு' என்று சொல்வது போலச் சிரித்துக்கொண்டு அவள் அந்தக் குழந்தையை எடுத்து வைத்துக் கொள்ளுகிருள். குழந்தை அழுகையை நிறுத்திச் சீதையின் கன்னத்தோடு தன் கன்னத்தைக் கொண்டுபோய் ஒட்டிக் கொள்ளுகிறது. திண்ணையின்மேல் ராமனும் சீதையும் நிற்கிரு.ர்கள். வாசல் படியில் பக்கவாட்டில் நின்று தொழுகிருர்கள் தியாகையரும் அவர் மனைவியும். முன்பக்கத்தில் கூப்பிய கரங்களுடன் ஜனத்திரள் நிற்கிறது. மனிதர்களைச் சுற்றிப் பசுக்களும், மற்றும் கன்று காலிகளும் வந்து ஏறிட்டுப் பார்த்துக்கொண்டு நிற்கின்றன. மரங்களில் இலே தவருமல் பறவைகள். இத்தனை உயிர் ராசிகளும் ராம தரிசனத்திலேயே மெய்ம்மறந்து நிற்கின்றன. மனிதர்கள் பேசவில்லை; பறவைகள் பாடவில்லை. மரங்களில் இலைகள்கூட அசையவில்லை. இந்த அமைதிக்கு, முன் எல்லே பின் எல்லை எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. தெய்வாம்சம் மனித நிலைக்கு வந்தது; மனிதாம்சம் தெய்வ நிலையை எட்டியது. இந்த நிலைமாற்றம் இரண்டு அம்சங்களுக்குமே பெருமையை அளித்தது. இரண்டும் சந்தித்துக் கொண்டே மத்திய உலகமும், தெய்வ உலகமும், மனித உலகமும் ஒன்ருகி விட்டன. எப்பேர்பட்ட திரிவேணி சங்கமம்: இந்தச் சங்கமத்தில் தெய்வமும், மனிதனும் மட்டுமல்ல, விலங்கினங்களும், தாவரங் களுமே வந்து கலந்துவிட்டன. அப்போது அமைதியைக் கையிலிருக்கும் சிறு குழந்தை த