பக்கம்:பிள்ளைக்கலி.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தலைக்குனிவு நாரண-துரைக்கண்ணன் 'சார், யாரோ ஒரு கிழவர் வந்திருக்கிரு.ர். உங்களைப் பார்க்கணுமாம்” என்று தெரிவித்தான் விடுதி வேலையாள். உடன்மாணவர்கள் சிலருடன் செஸ் (சதுரங்கம்) ஆடிக் கொண்டிருந்த சிதம்பரத்துக்கு வேலேயாள் வந்து கூறியது காதில் விழவில்லை. அவ்வளவுக்கு ஆட்டத்தில் அவன் கவனம் ஈடுபட் டிருந்தது. வேலையாள் இரண்டாம் தடவை உரத்துக் கூறிய பிறகு தான், சிதம்பரம் தலைநிமிர்ந்து நோக்கினன். 'யார், என்னையா? ' - x > "ஆமாம், சார் 'யார் தேடி வந்திருக்கிரு.ர்கள் என்று சொன்னுய்?’’ 'யாரோ ஒரு கிழவர். y "கிழவரா?" 'ஏன்? எவளேனும் குமரி யொருத்தி, தேடி வந்திருப்பா ளென்று நினைத்தாயா?” என்று நண்பைெருவன் கிண்டல் பண்ணி ஞன். இந்தக் கேலிப் பேச்சு அவனுக்கு மகிழ்ச்சி உண்டாக்கிய தாயினும், வெளிக்குக் கோபங் கொண்டவன்போல் பாவனை செய்து, 'சட் உளருதே!' என்று கடிந்து கொண்டான். பின் அவன் வேலையாளைப் பார்த்து, 'அந்தக் கிழவன் யார்? எங்கி ருந்து வந்தான்? எதற்காக என்னைப் பார்க்க வேண்டுமாம்: இதையெல்லாம் விசாரிக்காமல், யாரோ பார்க்க வந்திருக்கிருர் என்று சொல்ல வந்து விட்டாயே? முட்டாள்! வழியே போகிறவன் வருகிறவன் எல்லாம் பார்க்கவேண்டுமென்ருல், உடனே நாங்கள் பேட்டியளிக்க வேண்டும். இதைவிட எங்களுக்கு வேறுவேலையில்லை என்பது உன் எண்ணமா?...' என்று அதிகார தோரணையில் கேட்டுத் தடபுடல் பண்ணினன். -