பக்கம்:பிள்ளைக்கலி.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 அபரஞ்சி அவனை ஒரு மாதிரியாக ஏறிட்டுப் பார்த்தாள். பிறகு மெள்ள எழுந்து நின்று, 'பூசாரி ஐயாகிட்டே ஒரு விசயம் சொல்லணும்னு வந்தேன்...' என்று தணிந்த குரலில் இழுத்தாள். 'என்ன விஷயம், அபரஞ்சி ?' என்று சாதாரணமாகக் கேட்டான் ஆண்டியப்பன். 'ஒண்ணுமில்லே...வந்து...” 'கம்மா, சொல்லு! என்ன விசயம் ?’’ 'வந்து எனக்கு ஒரு நூறு ரூபாய் கைமாத்தா வேணும்.' ‘'என்ன! நூறு ரூபாயா ?’’ 'ஆ...மாம். ஓர் அவசரத் தேவை. பக்கத்து வீட்டுக்காரி கிட்டே சீட்டுப் பிடிச்சுட்டேன். நாலு மாசமா பணம் கட்டலே. அவள் ஒரேயடியா நெருக்குகிருள். எங்கேயும் புரட்ட முடியலே. அதனுலேதான்...' ‘'என் கிட்டே ஏது நூறு ரூபா ? நூறு பைசாகூட இல்லையே! "அப்படிச் சொல்லப்படாது. உன்னைத்தான் நம்பியிருக் கிறேன்.' 'என்ன, அபரஞ்சி! அவ்வளவு பெரிய தொகை என்னிடம் ஏது? என்னை நம்பி எவன் நூறு ரூபா கடன் கொடுப்பான்? அப்படிக் கொடுக்கிறவன் இருந்தா கண்டிப்பா உனக்கு வாங்கிக் கொடுப்பேன்." ‘'நீ எதுக்குக் கடன் வாங்கி எனக்குக் கொடுக்கணும் ?’’ பின்னே?" 'இப்படிக் கேட்டா நான் என்ன சொல்றது?’ என்று சிணுங்கிய அபரஞ்சி, முன்ருனயை முறுக்கிக்கொண்டு மெல்லிய குரலில் சொன்னுள். 'ஒண்னும் தப்பா நினைச்சுக்காதே! பிள்ளை யார் உண்டியிலிருந்து ஒரு நூறு ரூபா எடுத்துக் கொடு, ரெண்டாம்பேருக்குத் தெரியாம நான் திருப்பிக் கொடுத்துட றேன்.' ஆண்டியப்பன் திடுக்கிட்டு விட்டான். அவனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. அபரஞ்சியை விழித்துப் பார்த்தான்.