பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்து இறங்குவார்கள். அவர்கள் வருவதை யும் போவதையும் கரையில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பான் அந்தச் சிறுவன். - சில மாலுமிகள், தாங்கள் போய்ப் பார்த்து வந்த இடங்களைப் பற்றிக் கதை கதையாகக் கூறுவார்கள். சிலர், நடுக் கடலிலே புயற். காற்று வந்ததையும், அதைச் சமாளித்ததை யும் விரிவாக எடுத்துச் சொல்லுவார்கள். வேறு சிலர், சுரு:மீன், திமிங்கிலம் முதலிய வற்றுடன்சண்டைபோட்டுத் தப்பியவிதத்தை அழகாக அபிநயத்தோடு கூறுவார்கள். இவ ற். றையெல்லாம் வாயைப் பிளந்தபடி வியப் போடு அவன் கேட்டுக் கொண்டிருப்பான். சில நாட்கள் சென்றன. "நாமும் கப்பல் ஏறிக் கடலிலே போக வேண்டும்" என்ற ஆசை அவனுக்குத் தோன்றியது. நாள் ஆக ஆக அங்த ஆசை அவனுடனே வளரத் தொடங்கியது. ஒரு காள், அவன் பள்ளிக்கூடத்தில் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தான். அதில், உலகம் தட்டையாக இருப்பதாகவே எல்லோரும் கினைக்கிருர்கள். அது தவறு. உலகம் உருண்டையாகத்தான் இருக்கிறது’ என்று ஓர் அறிஞர் எழுதியிருந்தார். அதைப் பற்றி ஆசிரியர்களிடம் அவன் கேட்டான். அவர்கள். எவனே ஒருவன் உளறியிருக்கி, ருன். அதை கம்பாதே உலகம் தட்டையா 16