உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான். ஏட்டிலே எழுதினன். நாடகத்தை ஒரு வழியாக முடித்தான். அண்ணனிடம் கொண்டுபோய்க் காட்டினன். அவர் நாட கத்தைப் படித்துப் பார்த்தார். 'தம்பி, மிக நன்ருக இருக்கிறது. கம் தங்தை எழுதுவதைப் போலவே எழுதியிருக் கிருய். நம் தங்தையின் ஆசையை நிறை. வேற்றிவிட்டாய்' என்று கூறி ஆறுமுகத் தைக் கட்டித் தழுவினர். பர்சிவல் துரை என்ற ஆங்கிலப் பாதிரி யார் நடத்திய பள்ளிக்கூடத்தில் சேர்ந்து ஆறுமுகம் படித்தான். தமிழிலும் ஆங்கிலத் திலும் கல்ல தேர்ச்சி பெற்ருன். சிறு வயதி லேயே ஆறுமுகத்திற்கு இருந்த தமிழ்ப் புலமையைக் கண்டு எல்லோரும் வியக் தார்கள். மாணவனுயிருந்த போதே கீழ் வகுப் புகளுக்குத் தமிழ்ப்பாடம் சொல்லிக் கொடுக் கும்படி பர்சிவல் கூறினர். ஆறுமுகத்திடம் மாணவர்கள் மட்டுமா தமிழ் கற்றுக் கொண் டார்கள்? அங்தப் பர்சிவல் பாதிரியாரும் கற் றுக் கொள்ளத் தொடங்கிவிட்டார்! விரை விலே அவர் தமிழை கன்ருகக் கற்றுக்கொண் டார். ஆறுமுகத்தின் உதவியுடன் பைபிள் என்னும் கிறிஸ்தவ மத நூலைத் தமிழில் மொழி பெயர்த்தார். எல்லோரும் அங்த மொழி பெயர்ப்பை மிகவும் பாராட்டினர்கள். 29