பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

ஆனால், பாதிரியாரிடமிருந்து வந்த பதிலில், 'அந்தத் தேதியில் தாம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள ஒரு ஜோலி இருப்பதாகவும், தம்மை அதிகம் எதிர்பார்க்க வேண்டாம் என்றும், முடிந்தால் அவசியம் வருவதாகவும் எழுதியிருந்தார். ஆனால், கார்த்திகேயனா விடுபவர் ?

"இந்த விழாவும் விருந்தும் உங்களுடையவை.என் மகனுக்கு வாழ்வு கொடுத்தவர் தாங்கள். தவறாமல், நீங்கள் வந்து, என் மகனை ஆசீர்வதித்தால்தான், நானும் சேகரும் சாப்பிடுவோம்" என்று எழுதிப் போட்டார்.

குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட மணிக்கு விருந்திற்கு அழைக்கப்பட்ட அனைவருமே வந்துவிட்டார்கள். இரவு மணி ஏழரை தாண்டி எட்டும் ஆகிவிட்டது. பாதிரியார் மட்டும் வரவில்லை. அனைவரும் காத்திருந்தார்கள். கார்த்திகேயன் தவியாய்த் தவித்தார்.

உடனே பிரின்ஸிபால், "அவர் வராவிட்டால் என்ன? அவர்தான் கடிதத்தில் எழுதியிருந்தார் என்கிறீர்களே. இதற்காக எவ்வளவு நேரம் மற்றவர்களைக் காக்க வைக்க முடியும்? நீங்கள் ஆரம்பித்துவிடுங்கள்!" என்றார்.

இதைக் கேட்ட. பிள்ளை ஒரு முறை சிரித்தார். "சார், உங்களை அறிமுகப்படுத்தி, என் மகனின் இந்த நிலைக்குக் காரணமான அவரையும் உங்களையும் கௌரவிப்பதுதான் இந்த விருந்தின் நோக்கமே" என்று கூறி விட்டார்.

பிறகு பிரின்ஸிபால், "அப்படியானால் நான் இப்போதே என் காரில் புறப்பட்டுச் சென்று, எப்படியும் என் நண்பரை அழைத்து வந்துவிடுகிறேன்" என்று புறப்பட்டுச் சென்றார்.