பக்கம்:பிள்ளை வரம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13; 3: Gigid 43 சனத்திற்குச் சென்றனர். என்ன கவுண்டரே! அர்ச் சனே உண்டா? அஷ்டோத்தரமா, ஸஹஸ்ர நாமமா?’ என்ருன் அர்ச்சகன். முத்துசாமிக் கவுண்டர், 'ஸஹஸ்ரநாமமே பண்ணுங்கோ, சாமி” என்ருர், அர்ச்சனை வாயுவேகமாக நடந்து தீபாராதனை. யில் முடிந்தது. முத்துசாமிக் கவுண்ட்ர், வேங் கடாசலபதி, பிள்ளைக் குறை தீர்க்கவேனும்’ என்று வாய்விட்டுச் சொல்லித் துதித்தார். லக்ஷ்மிக்கு அதைப்பற்றிக் கவலை இருந்ததாகத் தெரியவில்லை. கணவன் நாகரிக இளைஞனக இல்லையே என்பதுதான் அவள் ஏக்கம் சுவாமி தரிசனம் செய்துவிட்டு முத்துசாமிக் கவுண்டர் காதில் துளசியைச் செருகிக்கொண்டு இருக்கையை நோக்கிப் புறப்பட்டார். லசமி சிந்தனையில் ஆழ்ந்தபடியே அவர் பின்னல் நடந்து கொண்டிருந்தாள். நாவல்களிலெல்லாம் காதலைப் பற்றி அவள் படித்திருக்கிருள். அவள் படித்ததற்கும் அவளது நிலைமைக்கும் எங்காவது சம்மந்தம் இருக்கிறதா? மனோபாவமும், கற்பன சக்தியும் மறைந்துபோன ஒரு கிழவருடன் அவள் வாழ்க்கை இன்பத்தைத் தேடவேண்டியிருந்தது. வீடு வந்து சேர்ந்தனர். முத்துசாமிக் கவுண்டர் நடந்த அலுப்பால், உஸ், அப்பாடா!' என்று உட்கார்ந்தார். லக்ஷ்மி எண்ணமிட்டபடி வெளியே நின்ருள். அந்தத் தருணத்தில்_மாடியிலிருந்து ஓர் இளைஞன் இறங்கி வெளியே போஞன், i്

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/44&oldid=825126" இலிருந்து மீள்விக்கப்பட்டது