பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 2?

அண்ணாவை "imitation" இமிடேஷன் என்றால் - ரிஃப்ளக்ஷன், ரீ புரொடக்ஷன், ரெப்பர்செண்டேஷன், இமிடேட்டர், எக்கோ, கக்கூ, பேரட் என்ற - ஒரு சொல் : பல பொருட்கள் உடைய சொல்:

"imitation" இமிடேஷன், வினைச் சொல்லாக வருமானால் - மிரர், ரிஃப்ளக்டர், ரிப்பீட், சிமுலேட், பேரலல், மேட்ச் என்று பல பொருள் தரும் வார்த்தை!

"imitation" இமிடேஷன், அட்ஜெக்டிவ்வாக எடுத்துக் கொண்டால் - லிட்டரல் என்று பொருள்!

ஒன்றை அப்படியே பிரதிபலிக்கும் ஒன்றை இமிடேட் என்று கூறலாம். அதாவது பார்த்துப் பின்பற்று', 'பார்த்துப் பழகு’, ‘ஏறக்குறைய ஏற்புடையதாகச் செய்ய முயலு' என்ற பொருள் தரும்.

தாமஸ் ஜி கெம்பீஸ் என்பவர், 'தி இமிடேஷன் ஆஃப் தி கிரைஸ்ட்” என்ற புத்தகத்தை எழுதியிருப்பது கட்டுரையாளருக்குத் தெரியுமா?

அந்த புத்தகம் அமெரிக்காவிலே உள்ள சிகாகோ நகரிலே அச்சானது!

'தி இமிடேஷன் ஆஃப் தி கிரைஸ்ட்” என்ற அந்த வாக்கியத்தின் உட்பொருள் - 'ட்டு ஃபாலோ தி கிரைஸ்ட்” அதாவது, "கிருஸ்துவைப் பின்பற்று” என்பதாகும்.

கட்டுரையாளரே! நீர் எழுதிய கட்டுரைக்குக் கொடுத்த 'இமிடேஷன் காந்திக்கு சிலையாம்' என்ற பெயர் மூலமாகப் புரிவது என்ன தெரியுமா?

காந்தியடிகளுக்குப் பிறகு - அந்த மகாத்மாவைப் பின்பற்றக் கூடிய, ஒப்பற்ற ஒரு தலைவர் அறிஞர் அண்ணாதான்் என்பதை - அழுத்தத் திருத்தமாக நீரே கூறி விட்டீரே!

இதுதான்் ஆங்கிலம் புரியாதவன் எழுதும் புத்தியின் இலட்சணமே!

அந்த ஆங்கில வார்த்தையின் அற்புத மாயா ஜாலங்களைப் புரிந்து கொள்ளும் அறிவு உமக்கு இருக்கிறதா?