பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Maii

2. "Madras

'கம்பரசம் போன்ற ஆபாசத்தில் எழுதிய அண்ணா துரையைக் கம்பனுக்கு இணையாகக் கருதுவதா?”

"ஆரிய மாயை, ரோமாபுரி ராணிகள், போன்ற ஆபாச இலக்கியங்களை எழுதிய கர்த்தாவை, திருவள்ளுவர் - இளங்கோவடிகளுக்கு இணையாகத் தரம் பார்க்கலாமா?"

Madras Mail என்ற ஆங்கில நாளேட்டில் மேற்கண்ட கண்டனக் குரலை எழுப்பியவர் . ஜெயபேரிகை” நாளேட்டைப் போல கட்டுரை வடிவிலே அல்ல!

"ஆசிரியருக்குக் கடிதம் என்ற பகுதியிலே - அந்த மெயில்’ ஏடு ரசிகர், தனது கருத்தைத் தீட்டியிருக்கிறார். அதுவும் ஒரே ஒரு பத்திச் செய்தி அது:

இந்த ஒரு கலம் செய்தியை, திரு.ஜெயகாந்தன் அவர்களை ஆசிரியராகக் கொண்ட ஜெயபேரிகை’ நாளேடு - ஐந்து கலம் செய்தியாக - பெரிய பெரிய எழுத்துக்களைக் கொண்ட கட்டுரை வடிவத் தோற்றத் தலைப்பில், அப்படியே அதைத் திருப்பிப் பிரசுரித்து 'மெயில் ஏடு கண்டனம்' என்று வெளியிட்டுள்ளது.

எதைக் காட்டுகின்றது இந்தக் கட்டுரையின் தோற்றமும், வெளியிடும்?

'மெயில் ஏட்டில் எழுதிய தோழரைவிட, 'ஜெயபேரிகை” ஏட்டின் மன அரிப்பு, அறிஞர் அண்ணா அவர்கள் மீது